Saturday, February 18, 2012

டி. எக்ஸ் போட்டி – 2012


யுனஸ்கோவினால் முதலாவது உலக வானொலி நாள் இந்த வருடம் முதல் கொண்டாடப்படுகிறது. அதனை ஒட்டி இந்த ஆண்டிற்கான டி.எக்ஸ் போட்டியை நடத்துகிறது ஆர்டிக் டி.எக்ஸ் கிளப். போட்டியில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவருக்கும் அகில இந்திய வானொலியின் சிறப்பு வண்ண அட்டை மற்றும் ஞானவாணி-யின் முத்திரை பதிக்கப்பட்ட பெனண்ட்டும் அனுப்பி வைக்கப்படும். 

போட்டிக்கான கேள்விகள் இதோ.

1. டந்த 31 ஜனவரி 2011-டன் தனது சிற்றலை ஒலிபரப்பினை நிறுத்திக் கொண்ட வானொலி எது?
a) Radio Afghanistan, b) Radio Bulgaria, c) DW d) RNZI.


2. தனது 70-வது ஆண்டு விழாவினை 2011-ஆம் ஆண்டில் கொண்டாடிய வானொலி எது?
a) AIR, b) NHK, c) CRI, d) BBS.


3. சோமாலியாவில் இருந்து ஒலிபரப்பி வரும் கீழ்கண்ட ஒரு வானொலி தனது ஒலிபரப்பினை 2012-ல் நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது. அது எந்த வானொலி?
a) Radio Mogadishu, b) Radio Al-Furqaan, c) Radio Horn Afrik, d) Radio Bar Kulan.


4. ரேடியோ மயாமி இண்டர்நேசனல் கடந்த 7 ஜனவரி 2012 அன்று எந்த இடத்தில் இருந்து சோதனை ஒலிபரப்பினைச் செய்தது?
a) USA, b) Madagascar, c) Costa Rica, d)Guam.


5. தென் ஆப்பிரிக்க அமெச்சூர் ரேடியோ லீக் 1730 யுடிசி-யில்  4895 அலை எண்களில் எந்த ஒலிபரப்பு தளத்தில் இருந்து தனது சேவையைச் செய்கிறது?
a) Meyerton,  b)Sitkunai, c) Shepparton, d) Tinian.


6. தெற்கு பசுபிக் பெருங்கடலில் அமைந்துளள இரண்டு நாடுகள் தனது நாட்டின் நேரத்தினை சமீபத்தில் மாற்றின. அவை எந்த நாடுகள்?
a) Samoa and Tokelau, b) Tokelau and Vanuatu, c) Samoa and Nauru, d) Norfolk and Samoa.


7. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனது ஒலிபரப்பினைத் தொடங்கிய உகாண்டா நாட்டு வானொலியின் பெயர் என்ன?
a) Radio podillia Tsentr, b) Radio Skifia Tsentr, c) Radio Tavira, d) Radio Dunamis.


8. இந்தியாவில்ஹாம் திருவிழா 2011” எந்த நகரத்தில் நடைபெற்றது?
a) Bangalore, b) Kochi, c) Pollachi, d) Chennai.


9. எலக்ட்ரானிக் டி.எக்ஸ் பிரஸ் எத்தனையாவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறது?
a). 15, b) 14, c) 16, d) 17.


10. எட்டாவது அகில உலக சிற்றலை ஒருங்கிணைப்பு கருத்தரங்கம் எந்த இடத்தில் நடைபெற்றது?
a) New Delhi, b) Johannesburg, c) Kuala Lumpur, d) Tokyo.


11. சமீபத்தில் 3டி வண்ண அட்டையை வெளியிட்ட வானொலி எது?
a) BBC, b) VOA, c) RNW, d) NHK.


12. ஆகாஷ்வாணி சுமங் லீலா திருவிழா எந்த நகரத்தில் நடைபெற்றது?
a) Imphal, b) Leah, c) Imphala, d) Mumbai.


13. காரில் பொருத்தக் கூடிய டி.ஆர்.எம். வானொலியை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?
a) Philips, b) Delphi, c) Sony, d) Himalaya.


14. பாப்காக் இண்டர்நேசனல் குழுமம் கீழ்கண்ட எந்த வானொலியோடு தொடர்பு கொண்டது?
a) BBC, b) IBB, c) RNZI, d) BBG.


15. ரேடியோ ரோமேனியா இண்டர்நேசனல் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
a) 1 Dec 1930, b) 1 Nov 1928, c) 1 Oct 1928, d0 1 Dec 1930.


16. உலகின் முதல் சக்தி வாய்ந்த ஒலிபரப்பு எந்த ஆண்டு, எந்த அலைவரிசையில் தொடங்கப்பட்டது?
a) 1950-7160, b) 1951-7200, c) 1951-7670, d) 1950-7670.


17. ரேடியோ சின்ஹுவா எந்த நாட்டில் இருந்து ஒலிபரப்பாகிறது?
a)Taiwan, b)Japan, c) China, d) Mangolia.


18. ”ஓ ஹோலி நைட்” எதனோடு தொடர்பு உடையது?
a) BVB, b) Marconi, c) WYFR, d) Reginald Fessenden.


19. இந்திய டி.எக்ஸ். கிளப் இண்டர்நேசனல் 2012 ஆண்டிற்கான டி.எக்ஸ். பெடிசனை எந்த மாநிலத்தில் நடத்தியது?
a) Orissa, b) West Bengal, c) Tamil Nadu, d) Assam.


20. கேரிபீரிட் எதனோடு தொடர்புடையவர்?
a) K9AY, b) DX program, c) Broadcaster, d) QSL Collector.


21. எந்தத் தமிழ் வானொலிக்கு ’வானொலி 6’ என்றப் பெயர் வழங்கப்பட்டது?
a) RTVM, b) SLBC, c) BBC, d) CRI.


22. உலக வானொலி நாள் யுனஸ்கோ-வினால் எந்த தேதியில் கொண்டாடபடுகிறது?
a) 13 March, b) 13 January, c) 13 February, d) 13 December.


23. கீழ்கண்ட முத்திரை, எந்த சர்வதேச வானொலியோடு தொடர்புகொண்டது?














a) VOA, b) RCI, c) ABC, d) BBC.

24. கீழ்கண்ட வண்ண அட்டையை அனுப்பிய வானொலி எது?







a) SLBC, b) AIR, c) Radio Botswana, d) Bangladesh Betar.


25. பி.சி.டி.எக்ஸ்.நெட்-டை சமீப காலமாக ஒருங்கிணைத்து ஒலிபரப்பி வருபவர் யார்?
a) VU2FOT, b) VU3SIO, c) VU3BGK, d) 4S7VK.


போட்டிக்கான நிபந்தனைகள்:
  1. விடைகள் 31 மார்ச் 2012-ற்கு முன் கீழ்கண்ட முகவரியை வந்தடைய வேண்டும்.
  2. விடையுடன் ஏதேனும் ஒரு அகில இந்திய வானொலியின் ஒலிபரப்பினைக் கேட்டு, அதற்கான நிகழ்ச்சி தர அட்டவணையை அனுப்ப வேண்டும்.
  3. நிகழ்ச்சி தர அட்டவணையில், வானொலி நிலையத்தின் ஊர், ஒலிபரப்பினை கேட்ட நாள், இந்திய நேரம், அலை எண், நிகழ்ச்சியின் விபரம், ஒலிபரப்பின் தரம் ஆகியவற்றை மறவாமல் எழுத வேண்டும்.
  4. விடைகளுடன், எதேனும் ஒரு சர்வதேச வானொலி அனுப்பிய வண்ண அட்டை ஒன்றைக் கண்டிப்பாக இணைக்க வேண்டும்.
  5. அத்துடன் எதேனும் ஒரு சர்வதேச வானொலி அனுப்பிய ஸ்டிக்கர் ஒன்றையும் இணைக்க வேண்டும்.
  6. போட்டியின் நுழைவுக் கட்டணமாக இந்திய நேயர்கள் ரூ.25/-ற்கான தபால் தலைகளை இணைப்பது அவசியம்.
  7. வெளிநாட்டு நேயர்கள் இரண்டு ஐ.ஆர்.சி. அல்லது இரண்டு அமெரிக்க டாலரை நுழைவுக் கட்டணமாக இணைப்பது அவசியம்.
  8. போட்டிக்கான விடைகளை அனுப்ப வேண்டிய முகவரி:
த. ஜெய்சக்திவேல்,
ஞானவாணி 105.6 எப்.எம்,
தொடர்பியல் துறை,
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,
திருநெல்வேலி – 627 012.

போட்டிக்கான அனுசரனையாளர்கள்:




No comments: