Wednesday, July 01, 2015

தூர்தர்சனின் பிரசார் பாரதி குழுவில் நடிகை கஜோல்: மத்திய அரசு சிபாரிசு

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அகில இந்திய வானொலி மற்றும் தூர்தசன் டெலிவிஷனுக்கு நிகழ்ச்சிகள் தொடர்பான ஆலோசனைகள் வழங்க ‘பிரசார் பாரதி போர்டு’ என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. ‘பிரசார் பாரதி‘யானது தூர்தர்சன் தவிர, நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தும் நடிப்பு பயிற்சி கல்லூரிகளையும் நிர்வகித்து வருகிறது.

‘பிரசார் பாரதி’ போர்டில் தலைவர், முதன்மை நிர்வாக அதிகாரி, தனி உறுப்பினர் மற்றும் 6 பகுதி நேர உறுப்பினர்களும், தகவல் – ஒலிபரப்பு அமைச்சக பிரதிநிதி, அகில இந்திய வானொலி, தூர்தர்சன் முன்னாள் அதிகாரிகள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது ‘பிரசார் பாரதி’ பகுதி நேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் ஜே.என். தீட்சித்தின் மகள் தீபா தீட்சித், இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலான ராஜாஜியின் பேரன் கே.ஆர்.கேசவன் ஆகியோர் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் ராஜினாமா செய்தனர். இவர்கள் தவிர மேலும் 2 உறுப்பினர்கள் பதவியும் காலியாக உள்ளது. 

இதையடுத்து காலியாக உள்ள 4 இடங்களுக்கு 7 பேர் கொண்ட பெயர் பட்டியலை மத்திய தகவல் – ஒலிபரப்பு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இதில் நடிகை கஜோல் பெயரும் இடம் பெற்றுள்ளது. மேலும் பிரபல பஜன் பாடகர் அனுப் ஜவோட்டா, வாஜ்பாயின் மீடியா ஆலோசகர் அசோக் தாண்டன், மூத்த பத்திரிகையாளர் மின்ஹஸ் மெர்ச்சன்ட் ஆகியோர் பெயரும் இடம் பெற்றுள்ளனர். 

இன்று தகவல் தொடர்பு அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் பிரஸ் கவுன்சில் தலைவர் ஆகியோர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பிரசார் பாரதி உறுப்பினர்கள் 4 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

No comments: