Sunday, January 23, 2022

யு ஜி சி கேள்வித்தாளில் வானொலி

பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வருடத்திற்கு இரண்டு முறை தேசிய தகுதித்  தேர்வினை (National Eligibility Test) நடத்துகிறது. 2021ஆம் ஆண்டில் முதுகலை தமிழ் மாணவர்களுக்கு  நடத்தப்பட்ட தேர்வில் வானொலி தொடர்பாக ஒரு கேள்வி கேட்கப்பட்டுள்ளது. 


அதில், வானொலித் தொடர்பான புத்தகங்களை எழுதிய திரு.கோ.செல்வம் (உங்கள் வானொலி) மற்றும் திரு.வெ.நல்லதம்பி (உலகமேலாம் தமிழோசை) அவர்களின் வரிசையில் தங்க.ஜெய்சக்திவேல் எழுதிய  'உலக வானொலிகள்' புத்தகத்தினையும் இணைத்து கேள்வியாக கேட்டுள்ளனர். 


இந்த தேர்வினை எழுதிய JNU தமிழ் துறை மாணவர் தமிழ் பாரதி, சமீபத்திய சந்திப்பில் இந்த விபரத்தினை கூறினார். நேற்று இந்த வினாத்தாளையும், விடைகளையும் UGC இணையத்தில் வெளியிட்டுள்ளது.


ஒரு வகையில் இது மகிழ்ச்சியான செய்தி. வானொலித் தொடர்பான எழுத்தாளர்கள் வரிசையில் நம்மையும் அங்கீகரித்துள்ளது UGC. இன்னொரு வகையில், இந்த கேள்வி தவறானது. "கீழ்கண்ட புத்தகங்களில், வானொலிக்கு தொடர்பில்லாத புத்தகம் எது? என்று கேள்வி இருந்திருக்கலாம். எது எப்படியோ, கேள்வியை எடுத்தவர் சம கால ஊடக சூழலை அவதானித்து வந்துள்ளார். மகிழ்ச்சி!



Inline image



#UGC #JNU #NET #வானொலி #பல்கலைக்கழகமானியக்குழு 

No comments: