சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Showing posts with label வத்திக்கான் வானொலி. Show all posts
Showing posts with label வத்திக்கான் வானொலி. Show all posts
Tuesday, April 11, 2017
Sunday, February 14, 2016
வத்திக்கான் வானொலியில் சீர்திருத்தத்தில் நம்பிக்கை
வத்திக்கான் ஊடகத்துறையில் ஏற்படும் சீர்திருத்தத்தை நம்பிக்கையோடு நோக்குவதாக, வத்திக்கான் வானொலியில் தனது தலைமை இயக்குனர் பணியை இத்திங்களன்று நிறைவு செய்த இயேசு சபை அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் கூறினார்.
உரோம் த்ராஸ்பொந்தினா ஆலயத்தில் இத்திங்களன்று நிறைவேற்றிய நன்றித் திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றி மறையுரையாற்றிய அருள்பணி லொம்பார்தி அவர்கள் இவ்வாறு கூறினார்.
மறைப்பணி, மனம்மாற்றம், ஒன்றிப்பு ஆகிய மூன்று தலைப்புகளில் மறையுரையாற்றிய அருள்பணி லொம்பார்தி அவர்கள், உலகின் கடைசி எல்லைவரைக்கும் நற்செய்தியை எடுத்துச் செல்வதே வத்திக்கான் வானொலியின் பணி என்றும், வத்திக்கான் வானொலிப் பணியாளர்கள் தங்கள் வாழ்விலும், வானொலிப் பணியிலும் தாங்கள் எதற்காக அழைக்கப்பட்டுள்ளனர் என்பதைப் புரிந்துகொண்டு அதற்காகச் செபிக்குமாறும் கூறினார்.
உலகின் கடைசி எல்லைவரைக்கும் மீட்பரைக் கொணரவே இயேசு இவ்வுலகிற்கு வந்தார் என்றும், திருஅவையும், திருத்தந்தையரும் இயேசுவின் இப்பணியை தொடர்ந்து ஆற்றுகின்றனர் என்றும், இந்தப் பணியில் ஒத்துழைப்பு வழங்க வத்திக்கான் வானொலிப் பணியாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார் அருள்பணி லொம்பார்தி.
வத்திக்கான் வானொலி மையத்தில், பல்வேறு மொழிகளில் வழங்கப்படும் வானொலி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் இயக்குனராக முதல் 15 ஆண்டுகளும், 2005ம் ஆண்டு முதல், 2016ம் ஆண்டு வரை, வானொலியின் தலைமை இயக்குனராகவும் பணியாற்றிவந்தார் அருள்பணி லொம்பார்தி.
வத்திக்கான் வானொலியில் பணியாற்றிய அதே வேளையில், 2001ம் ஆண்டு முதல் ஏறத்தாழ பத்தாண்டுகள் வத்திக்கான் தொலைக்காட்சி மையத்தின் இயக்குனராகவும், 2006ம் ஆண்டு முதல் திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குனராகவும் பணியாற்றிவந்த அருள்பணி லொம்பார்தி அவர்கள், திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் இயக்குனராகத் தொடர்ந்து பணியாற்றுவார்.
இத்திங்களன்று வழங்கப்பட்ட பிரியாவிடை நிகழ்வில் வானொலிப் பணியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களின் நன்றியைத் தெரிவித்தனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
Thursday, June 05, 2014
வத்திக்கான் வானொலி நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப விருப்பமா?
வத்திக்கான்
வானொலி தன் நிகழ்ச்சிகளை ஐந்து கண்டங்களுக்கும் நேரடியாக ஒலிபரப்புவது
மட்டுமல்ல, பல நாடுகளின் வானொலிகள் மூலம் மறு ஒலிபரப்பும்
செய்கிறது.(2007ல் ஏறத்தாழ 1000 வானொலிகள் இதை ஆற்றின). இதற்கென பல
வானொலிகள் ஒப்பந்தமும் இட்டுள்ளன. பெரும்பாலும் இவை கிறிஸ்தவ வானொலிகளே.
இத்தகைய செயற்பாட்டின் மூலம் வத்திக்கான் வானொலி ஒலிபரப்பு அதிக மக்களை
அடைய முடிகிறது. 24 ஐரோப்பிய, 22 ஆப்ரிக்க, 22 அமெரிக்க, 6 ஆசிய மற்றும்
ஓசியானியா பகுதி நாடுகளைச் சேர்ந்த எண்ணற்ற வானொலிகள் வத்திக்கான் வானொலி
நிகழ்ச்சிகளை மறு ஒலிபரப்பு செய்து வருகின்றன.
வத்திக்கான் வானொலி
நிகழ்ச்சிகளை மறு ஒலிபரப்பு செய்ய விரும்புவோர், அதன் பன்னாட்டு
உறவுகளுக்கான அலுவலகத்தின் அனுமதி பெற்றிருத்தல் அவசியம். அவ்வனுமதிக்கு
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : relint@vatiradio.va
or fax number +39 06 6988 3237 (Mr. Giacomo Ghisani, Head of
International Relations, tel. number +39 06 6988 3945).
இவ்விண்ணப்பத்தைத் தொடர்ந்து, மறு ஒலிபரப்புக்குத் தேவையான விவரங்கள்
உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
நன்றி: வத்திக்கான் வானொலி
Thursday, May 15, 2014
வத்திக்கான் வானொலி - ஓர் அறிமுகம்:1
வத்திக்கான் வானொலி திருப்பீடத்தின் ஒலிபரப்பு நிலையம். இது வத்திக்கான் நகர நாட்டுக்குள் முறைப்படி அமைந்திருக்கின்றது. சர்வதேச சமுதாயத்தால் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. திருத்தந்தையின் திருப்பணிக்குச் சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. வானொலியை வடிவமைத்த குல்யெல்மோ மார்க்கோனி என்பவரால் அமைக்கப்பட்டு, திருத்தந்தை பதினோராம் பத்திநாதரால் 1931ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இவ்வானொலி இயேசு சபையினரால் நடத்தப்படுகின்றது.
கிறிஸ்துவின் நற்செய்தியைச் சுதந்திரமாகவும், பிரமாணிக்கத்துடனும் திறமையுடனும் அறிவிப்பதே வத்திக்கான் வானொலியின் முக்கியப் பணியாகும்.
- திருத்தந்தையின் உரைகளையும், எண்ணங்களையும் பரப்புதல்,
- திருப்பீடத்தின் நடவடிக்கைகளை அறிவித்தல்,
- உலகில் கத்தோலிக்கத் திருச்சபையின் வாழ்வு மற்றும் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை வழங்குதல்,
- விசுவாசிகள், திருச்சபை படிப்பினைகளின் ஒளியில், இக்காலத்தின் பிரச்சனைகளைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்கு உதவுதல் போன்ற பணிகள் மூலம், கத்தோலிக்க மையத்திற்கும் பல்வேறு நாடுகளுக்கும் இடையேயான தொடர்பை வளப்படுத்துகிறது இவ்வானொலி.
வத்திக்கான் வானொலி, உலகின் மறைமாவட்டங்கள் அல்லது ஆயர்கள் பேரவைகளுக்கு வானொலி ஒலிபரப்புத் துறையில் ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் வழங்குகிறது.
திருத்தந்தையின் அனைத்து அதிகாரப்பூர்வ வத்திக்கான் செயல்பாடுகளை ஒலிப்பதிவு செய்தல், அவற்றை ஒலிபரப்புதல், அந்த ஒலிப்பதிவுகளை விநியோகித்தல் ஆகிய நிர்வாக ரீதியானப் பணிகளை ஆற்றி வருகிறது. அத்துடன், உரோமைய கத்தோலிக்கத் திருத்தந்தையரின் குரல்களுக்கான ஒலிப்பதிவு உரிமங்களையும் அறிவுச் சொத்துக்களையும் தனிப்பட்ட விதத்தில் கொண்டு அவற்றைப் பாதுகாத்து செயல்படுத்தும் பொறுப்பையும் கொண்டுள்ளது.
வத்திக்கான் வானொலி, திருச்சபை மற்றும் மதம் சார்ந்த செய்திகளை வழங்குகின்றது. இத்தகையச் செய்திகளை பிற தொடர்பு ஊடகங்களில் கேட்க முடியாது. முதலில் இவ்வானொலி, திருத்தந்தையும் திருப்பீடமும் நடத்தும் நிகழ்ச்சிகளையும், அவர்களின் செயல்பாடுகளையும் அறிவிக்கின்றது. சமயச் சூழலில் அரசியல், சமூக, பொருளாதார விவகாரங்களைத் தருவதோடு, மக்கள் அவற்றில், காலத்தின் அறிகுறிகளைப் பார்த்து, விசுவாச ஒளியில் அவர்கள் செயல்படுவதற்கு ஊக்குவிக்கிறது.
சமயச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்ட அல்லது அதிக மக்கள் தொடர்பு வசதிகள் இல்லாத இடங்களில் வாழ்கின்றவர்கள் தங்களின் ஆன்மீக தாகத்தைத் தணித்துக் கொள்ளவும், வழிபாடுகளில் கலந்து கொள்ளவும் திருவழிபாட்டு நிகழ்ச்சிகள் வழியாக உதவுகின்றது வத்திக்கான் வானொலி. இன்னும் சொல்லப்போனால், புனித பேதுருவின் வழித்தோன்றலான திருத்தந்தையுடன் திருச்சபையின் ஒன்றிப்பை ஆழப்படுத்துவதற்கென திருத்தந்தை தலைமையேற்று நடத்தும் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றது.
வத்திக்கான் வானொலியின் பெரும்பாலான நிகழ்ச்சிகள் கிறிஸ்தவ வாழ்வின் பல்வேறு கூறுகளுக்கென ஒதுக்கப்பட்டிருந்தாலும், மனித சமுதாயம் மத நல்லிணக்கத்துடனும் ஒத்துழைப்புடனும் வாழ உதவியாக கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் பல்சமய உரையாடலிலும் தனிப்பட்ட கவனம் செலுத்தப்படுகின்றது. மேலும், இந்நிகழ்ச்சிகளில் திருச்சபையின் நீண்டகாலப் பாரம்பரியத்திற்கு ஒத்திணங்கும் வகையில், கலாச்சாரம், கலை, சிறப்பாக இசை போன்றவைகளுக்கும் போதுமான கவனம் செலுத்தப்படுகின்றது.
இயேசு சபையைச் சார்ந்த அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி சே.ச., 2005ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதியிலிருந்து வத்திக்கான் வானொலி இயக்குனராக இருக்கிறார்.
நன்றி: http://ta.radiovaticana.va
வத்திகான் வானொலி தமிழ் ஒலிபரப்பின் 50ஆம் துவக்க விழா மற்றும் நேயர் சந்திப்பு
நாள்: 1 ஜூன் 2014
நேரம்: காலை 9 முதல் மாலை 4 வரை
இடம்: புனித ஜோசப் கல்லூரி, திருச்சி
பங்கு கொள்ள விரும்புவோர் பதிவு செய்ய வேண்டிய முகவரி:
அலை பேசி: 9488 600 600
Tuesday, August 05, 2008
நேயர் உறவுகளுடன் வத்திக்கான் வானொலி தமிழ்பிரிவு
கோடை காலத்தில் இதமாக இருந்த நாளான கடந்த 25 மே 2008 ஞாயிறு அன்று திருச்சி தூயவளனார் கல்லூரி அரங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நேயர் உறவுகளுடன் வத்திக்கான் வானொலி தமிழ்பிரிவு சார்பில் நேயர் சந்திப்பு விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.விழாவிற்கு ரோமிலிருந்து அருட்சகோதரி தெரேசா அவர்களும், வத்திக்கான் வானொலி இந்தியஅலுவலகத்தின் இயக்குனர் அருட்பணி சேவியர் ராஜன் மற்றும் திரு. ஜார்ஜ் அவர்களும் வருகை தந்து சிறப்புற நடத்தினர். நீண்டகால நேயர்கள், வளமையான நேயர்கள், பிற மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த நேயர்கள் மற்றும் புதிய அறிமுக நேயர்கள் என பல தரப்பு நேயர்களும் வருகை தந்து விழாவினை சிறப்பித்து கொடுக்கும் முகமாக தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து நிகழ்ச்சிகள் பற்றிய பொதுவான விமர்சனக் கருத்துக்களை நேயர்கள் நேரடியாக பகிர்ந்து கொண்டனர். நேயர்களின் ஐயங்களுக்கு அருட்சகோதரி தெரேசா அவர்களும், திரு. சேவியர் ராஐன் அவர்களும் உடனுக்குடன் விளக்கமாக பதில் அளித்தனர்.
இதற்கிடையே விழா அரங்கிற்கு வெளியே வத்திக்கான் தலைமை கலையகத்திலிருந்து தொலைபேசி வழியாக தொடர்பு கொண்ட திரு. கிருஸ்டோபர் அவர்கள், விழா நடைபெறும் விதம் பற்றி கேட்டறிந்து, சிறப்பு நிகழ்ச்சிக்காக நேயர்களின் கருத்துக்களை தொலைபேசி வழியாகஒலிப்பதிவு செய்து கொண்டார்.
ஒலிபரப்பு தரம் பற்றி நேயர்கள் விவாதித்த வேளையில் வானொலி கேட்பதில் நீண்டகால அனுபவம்பெற்ற விழுப்புரம் திரு. ஜமீல்அகம்மது அவர்கள் சிற்றலை ஒலிபரப்பின் தன்மை குறித்தும் தொழில் நுட்பம் சார்ந்தும் பலவித விசயங்களை விரிவாக விளக்கிக் கூறினார்.
மேலும் சிற்றலை ஒலிபரப்பை கேட்பதில் அனைத்து நேயர்களும் அறிய வேண்டிய அடிப்படைநுணுக்கங்கள் பற்றி தனது நேரடி அனுபவங்களுடன் எளிமையாக எடுத்துக் கூறியது சிற்றலையில் இன்னும் அறிய வேண்டியது எவ்வளவோ உண்டு என்பதை அறிய முடிந்தது.
அடுத்து உரையாற்றிய திருச்சி அகில இந்திய வானொலி அறிவிப்பாளர் புலவர் கோ.சந்திரசேகர் அவர்கள் ஏறக்குறைய 48 ஆண்டுகள் தன் வாழ்வோடு இரண்டறக் கலந்து விட்ட வானொலி ஊடகம் பற்றிய பல அரிய தகவல்களை நகைச்சுவை நயம்பட எடுத்துக் கூறியது, கலந்து கொண்ட நேயர்களின் மனதில் வானொலி கேட்பதை தீவிரப்படுத்த வேண்டும் என்கின்ற தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்தது. இதுபோல வானொலி செவிமடுப்பது தொடர்பான விளக்கங்களை விழா நடத்தும்ஒவ்வொரு வானொலியும் தனது விழாவின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்து கொடுத்தால், வானொலிநேயர்களை இன்னும் ஊக்கப்படுத்தும் விதமாக அமையும். மேலும் பல புதிய நேயர்களை உருவாக்கவழிவகுக்கும்.
நிறைவாக நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. தூய வளனார் கல்லூரியின் அருட்பணி திரு. லாசர்அவர்களின் ஆசியுடன் கூடிய நிறைவுரை மற்றும் சிதம்பரம் திரு. விஜயராகவன் அவர்களின் நன்றியுரை யுடன் மாலை 4 மணிக்கு விழா இனிதே நிறை வடைந்தது.
- மின்னகல் செல்வராஜ்.
Labels:
தமிழ்பிரிவு,
மின்னகல் செல்வராஜ்,
வத்திக்கான் வானொலி
Subscribe to:
Posts (Atom)
