Showing posts with label வேரித்தாஸ் தமிழ்பணி. Show all posts
Showing posts with label வேரித்தாஸ் தமிழ்பணி. Show all posts

Sunday, May 10, 2009

வேரித்தாஸ் தமிழ்பணி உறவுசங்கம விழா 2009


வேரித்தாஸ் தமிழ்பணி இந்த ஆண்டு ஏற்பாடு செய்திருந்த இனிய இதயங்களின் குடும்ப விழாவான "உறவுசங்கம"-விழாவானது கடந்த 09 மே 2009 அன்று காலை 9 மணியளவில் திருச்சி தலைமை தபால் நிலையம் அருகில் உள்ள புனித பவுல் குருத்துவக் கல்லூரியில் வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சிறப்புமலர் வெளியிடப்பட்டது. விழாப் புகைபடங்களை கீழ்கண்ட தொடுப்பினைச் சொடுக்கி கண்டு மகிழுங்கள்.

நேயர்களின் ஒரு பகுதி

விழாவில் வெளியிடப்பட்ட மலர்

அருட்தந்தை டென்னிஸ் வாய்ஸ் மற்றும் அருட்தந்தை ஜெரோம் ஆரோக்கிய ராஜ் இருவருக்கும் நடுவில் மூத்த நேயர் விழுப்புரம் ஜமீல் அஹமது.

விழாப் புகைபடங்கள்

Monday, August 25, 2008

தமிழ் மையம் ஜெகத் கஸ்பார் சிறப்பு பேட்டி-பாகம் 1

வேரித்தாஸ் தமிழ்பணியின் ஊடாக சிற்றலை நேயர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டவர்,இன்று ‘திருவாசகம்’ மற்றும் ‘சென்னை சங்கமத்தின்’ ஊடாக வானொலி கேட்காத நேயர்கள் மத்தியிலும் வெகுவாக அறியப் பட்டவர், அருட்பணி ஜெகத் கஸ்பார் ராஜ்.தமிழ் பணியில் ஏழு ஆண்டுகாலம் பணியாற்றிய போது பல்வேறு முன்முயற்சிகளை மேற்கொண்டார்.அதில் மிக முக்கியமானது ‘உறவுச் சங்கம’ விழாக்கள். நேயர்கள் மத்தியில் புகழ்பெற்ற இந்த சங்கம விழாக்கள் இன்றும் தொடர்ந்து நடைபெறுகிறது. ‘நாம் நண்பர்கள்’ எனும் நேயர்களின் முகவரிகள் அடங்கிய தொகுப்பினை வெளியிட்டது தமிழ் சிற்றலை வானொலி வரலாற்றில் முதல் முறை எனலாம். அதன் மூலம், இன்றும் தொடர்பில் உள்ள நேயர்கள் ஏராளமானோர், ஜெகத் கஸ்பார் அவர்களுக்கு நன்றி சொல்லக் காத்திருக்கின்றனர். தனது பல்வேறு அவசரப் பணிகளுக்கு இடையிலும், நமது இதழின் ஆண்டு மலருக்கு அவர் வழங்கியச் சிறப்புச் செவ்வி இதோ......

இன்றைய சூழ்நிலையில் சர்வதேச வானொலிகளின் முக்கியத்துவம் எந்த அளவில் உள்ளது?
எனக்கு, நிபுணத்துவ ரீதியாக இதற்கு பதில் சொல்லத் தெரியாது. ஆனால் ஒரு அனைத்துலகவானொலியில் ஏறக்குறைய ஏழு ஆண்டுகாலம் கடமையாற்றினேன் என்ற வகையில், பதில் சொல்லமுடியும். வெகுஜன ஊடகங்கள் கையில் எடுத்துக்கொள்ளாத, அணுகாத மானுடப் பிரச்சினைகளை,சமூகப் பிரச்சினைகளை அணுகினால் அவை தொடர்ந்து முக்கியத்துவம் பெறுவதாக இருக்கும்.அவற்றுக்கு என ஒரு சிறு தளத்தினை வரையறுத்துக் கொண்டோ, அல்லது வெறும் செய்தியைதருவதோ அல்லது விளம்பரங்களுடன் கூடிய போழுதுபோக்கு நிகடிநச்சிகளைத் தருவது என்றால்,அதைத் தருவதற்கு இங்கு வெகுஜன வானொலிகள் நிறையவே இருக்கின்றன. அவற்றை விரும்பிக் கேட்பவர்கள், அறிவுத்தகவல்களைக் கூட ஒரு புதிய கோணத்தில் இருந்து திறனாய்வுடன் ஆழமாக ஒரு விசயத்தினைப் புரிந்து கொள்வது இங்கு சாத்தியமில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

சிற்றலை வானொலி கேட்கும் நேயர்கள் இன்று எங்கு அதிகமாக உள்ளனர்?பொதுவாகவே சிற்றலை ஒலிபரப்புகளைக் கேட்கக்கூடிய நேயர்கள் பெரும்பாலும் பிரச்சனை நடக்கின்றப் பகுதிகளில்தான் அதிகமாக உள்ளனர். குறிப்பாக யுத்தங்கள் நடக்கின்றப் பகுதிகளில் நேயர்கள் மிக அதிகமாகக் கேட்கின்றனர். இந்தப் பகுதிகளில் உள்ள நேயர்களுக்காகச் சரியாகப் பணியாற்றினால் சிற்றலை வானொலிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது. (தொடரும்..)

Monday, August 04, 2008

வானொலி உலகம்

லண்டன் ஐ.பி.சி. தமிழ் வானொலி தனது 11 ஆண்டுகளை நிறைவுச் செய்து கடந்த 9 ஜூன் 2008 ல் 12-ஆவது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது.


  • இங்கிலாந்தில் இருந்து ஒலிபரப்பாகிவரும் ரேடியோ கரோலின் இண்டர்நேசனலைத் தொடர்பு கொள்ள.
    studio@radiocaroline.co.uk

  • காரைக்கால் பண்பலையை தொடர்பு கொள்ள 04368-231500, 231550

  • வத்திகான் வானொலி தமிழ் பிரிவின் புதிய மின் அஞ்சல் முகவரி vradio@loyolacollege.edu

  • வேரித்தாஸ் தமிழ்பணியின் தொலை நகல் எண் 0063 293 81940

  • ஏற்காடு பண்பலை 5 ஜூன் 2008 முதல் 90.4 மெகா ஹெர்ட்சுக்கு பதிலாக 103.7 மெகா ஹெர்ட்சுக்கு மாற்றப்பட்டுள்ளது.

  • வானொலி, தொலைகாட்சி மற்றும் செயற்கைக்கோள் பற்றிய புதிய செய்திகளுக்கு சொடுக்கவும்
    http://www.mediaworldasia.dk/