Showing posts with label Awa. Show all posts
Showing posts with label Awa. Show all posts

Wednesday, May 01, 2024

ரெட்ரோ வானொலி

 

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு போஸ்ட்கிராஸரிடமிருந்து இந்த வானொலித் தொடர்பான அஞ்சல் அட்டைகளைப் பெறுவதற்கு வசதியை ஏற்படுத்திக் கொடுத்த  போஸ்ட்கிராசிங் மன்றத்திற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவற்றை நேரடியாக ஆஸ்திரேலிய அஞ்சல் துறையிலிருந்து  வாங்குவதற்கு ஏறக்குறைய ₹3,000 செலவு செய்திருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் சுங்க வரியையும் கட்டியிருக்க வேண்டும். ஆனால் போஸ்ட்கிராஸிங்கின் மூலம் கிடைத்த நண்பரின் உதவியால், வெறும் ₹75-க்கு அவற்றைப் பெற முடிந்தது.
நன்றி, யூரி,
போஸ்ட்கிராசிங் மன்றத்திற்கும் நன்றி!

அந்த அஞ்சல் அட்டைகளின் விவரங்கள் இங்கே:

எச்எம்வி கேப்ரைஸ், 1961

பிரபலமான HMV கேப்ரைஸ் 1961 இல் வெளியிடப்பட்ட ஒரு லோ-பாய் யூனிட் ஆகும். இது ஒரு ஸ்டீரியோகிராமும் ஆகும். இந்த வானொலிப் பெட்டி நான்கு வால்வு பெருக்கிகளைக் கொண்டுள்ளது, AM வானொலி மற்றும் BSR தானியங்கி டர்ன்டேபிள் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

கிரைஸ்லர் மாஸ்டர் மல்டி சோனிக், 1966

1966 கிரைஸ்லர் மாஸ்டர் மல்டி சோனிக் ஒரு ஹை-ஃபிடிலிட்டி, டாப்-ஆஃப்-லைன் ஸ்டீரியோகிராம் ஆகும். இது ஒரு பிளக்-இன் மைக்ரோஃபோன், எட்டு-வால்வு பெருக்கிகள் மற்றும் ஒரு கரார்ட் முழு-தானியங்கி டர்ன்டேபிள் ஆகியவற்றை உள்ளடக்கியது.

AWA B28 போர்ட்டபிள், 1963

1963 வெளிர்-இளஞ்சிவப்பு AWA B28 ஒரு போர்ட்டபிள் மற்றும் மின்கலம் மூலம் இயக்கப்படும் மோனோ ரெக்கார்ட் பிளேயர் ஆகும், இது இளைஞர்களுக்கு விருப்பமான ரெக்கார்ட் பிளேயர் ஆகும்.  உயர்தரப் பொருளாக இல்லாவிட்டாலும், இது AWAஇன் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட டிரான்சிஸ்டரை உள்ளடக்கியுள்ளது.  AWA (Amalgamated Wireless Australasia Ltd) ஆஸ்திரேலியாவில் டிரான்சிஸ்டர் வானொலியைத் தயாரித்த முதல் உற்பத்தியாளர்கள் இவர்கள் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.  (ஆஸ்திரேலியா போஸ்ட்)