Showing posts with label ஆகாஷ்வாணி. Show all posts
Showing posts with label ஆகாஷ்வாணி. Show all posts

Tuesday, December 16, 2025

ஆகாஷ்வாணி 90 - சிறப்பு நேர்காணல்


 ஆகாஷ்வாணி 90 ஆண்டுகளை கொண்டாட உள்ள இந்த சமயத்தில், திருமதி. ராஜ ராஜேஸ்வரி தயாரிப்பில், யாம் பங்கேற்ற  சிறப்பு வானொலி நேர்காணல் நிகழ்ச்சி இன்று 16-12-2025 (பாகம் 1) மற்றும் வரும்  28-12-2025 (பாகம் 2) ஆகிய தேதிகளில் ஒலிபரப்பாகிறது; இந்த நிகழ்ச்சியை சென்னை முதன்மை அலைவரிசையில் காலை 08:45 மணிக்கும், FM ரெயின்போ அலைவரிசையில் மதியம் 02:15 மணிக்கும், மற்றும் விவித் பாரதி தமிழ் அலைவரிசையில் இரவு 07:00 மணிக்கும் கேட்டு மகிழலாம். News On Air செயலி ஊடாகவும் கேட்கலாம். விரையில் யூடியூப்பில் பதிவேற்றிய தொடுப்பையும் இங்கே இணைக்கிறோம்.


Thursday, December 05, 2024

வானொலி இதழ் விற்பனை ஏஜெண்ட்களுக்கான கமிஷன் உயர்வு: ஒரு வரலாற்றுப் பார்வை



தமிழ்நாட்டில் பத்திரிகை விற்பனை ஏஜெண்ட்களுக்கு கமிஷன் வழங்கும் முறை பழமையானது. இந்த முறையை அடிப்படையாகக் கொண்டு, 1984-ம் ஆண்டு அகில இந்திய வானொலி, தனது வானொலி இதழை விற்பனை செய்யும் ஏஜெண்ட்களுக்கும் கமிஷன் வழங்கும் திட்டத்தை அறிவித்தது. இந்த திட்டம், ஏஜெண்ட்களின் உற்சாகத்தை அதிகரித்து, இதழின் விற்பனையை பெருக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது.

கமிஷன் விகிதங்கள்:

  • 99 பிரதிகள் வரை வாங்கும் ஏஜெண்ட்களுக்கு 25%
  • 100 முதல் 500 பிரதிகள் வரை வாங்குவோருக்கு 35%
  • 501ல் இருந்து அதற்கு மேல் வாங்குவோருக்கு 40%

இந்த திட்டத்தின் முக்கியத்துவம்:

கமிஷன் உயர்வு, ஏஜெண்ட்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தி, வானொலி இதழை விற்பனை செய்யும் வேலையை ஒரு நல்ல வாய்ப்பாக மாற்றியது.

கமிஷன் உயர்வால், வானொலி இதழின் விற்பனை கணிசமாக அதிகரித்தது. இதன் மூலம், வானொலி இதழின் பரவலும் அதிகரித்தது. கமிஷன் உயர்வு, ஏஜெண்ட்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவியது.

வானொலி இதழில், சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வானொலி நிகழ்ச்சிகள் பற்றியக் கட்டுரைகள் மற்றும் செய்திகளை வெளியிடுவதால், இந்த திட்டம் மறைமுகமாக சமூகப் பங்களிப்பையும் செய்தது.

வானொலி இதழ் நிற்கும் வரை இந்த விற்பனை ஏஜெண்ட்களுக்கு கமிஷன் வழங்கும் முறை தொடர்ந்தது. இன்று தொழில்நுட்ப வளர்ச்சியால், இணையம் மற்றும் மொபைல் செயலிகள் மூலம் இதழ்களை வாங்கும் வாய்ப்பு அதிகரித்திருந்தாலும், ஏஜெண்ட்கள் மூலமாக இதழ்களை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையவில்லை. இதற்கு காரணம், ஏஜெண்ட்கள் வாடிக்கையாளர்களுடன் நேரடியாக தொடர்பு கொண்டு, அவர்களின் தேவைகளைப் புரிந்து, அதற்கேற்ப இதழ்களை பரிந்துரைக்கின்றனர்.

1984-ம் ஆண்டு அகில இந்திய வானொலி அறிமுகப்படுத்திய கமிஷன் திட்டம், வானொலி இதழ் விற்பனைத் துறையில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக அமைந்தது. இந்த திட்டம், ஏஜெண்ட்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் வானொலி இதழ் ஆகிய மூன்று தரப்பினருக்கும் நன்மை பயக்கும் வகையில் அமைந்தது. வானொலி இதழ் தொடர்ந்து வெளிவந்திருந்தால்,  இன்றும் இந்த திட்டம் தொடர்ந்து செயல்பட்டிருக்கும்.

இந்த அறிவிப்பில், வானொலி இதழ் விற்பனை ஏஜெண்ட்களுக்கான கமிஷன் விகிதங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த திட்டம், ஏஜெண்ட்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த உதவியது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டம், சமூகப் பங்களிப்பையும் செய்தது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. 

படத்தில் உள்ள அறிவிப்பின் தேதி குறிப்பிடப்படவில்லை? இருந்தால், அந்தத் தேதியைச் சேர்த்து, அந்த காலகட்டத்தில் வானொலி இதழ்களின் நிலை குறித்து மேலும் விவரிக்கலாம்.

அந்த காலகட்டத்தில் வானொலி இதழ்கள் எவ்வாறு விநியோகிக்கப்பட்டன என்பது குறித்து விரிவாக விவாதிக்க வேண்டியுள்ளது. அந்த காலகட்டத்தில் வானொலி இதழ்களின் உள்ளடக்கம் எப்படி இருந்தது என்பது குறித்தும் ஆராயவேண்டியுள்ளது.

அந்த காலகட்டத்தில் வானொலி இதழ்களின் போட்டியாளர்கள் யார் என்பது குறித்தும் ஆராய்வது முக்கியம். 

Saturday, November 04, 2023

அகில இந்திய வானொலிக்காக ஒரு ஆய்வுப் புத்தகம்


பிபிசி, சீன வானொலி, வேரித்தாஸ் வானொலி மற்றும் இலங்கை வானொலிகளைத் தொடர்ந்து தற்பொழுது அகில இந்திய வானொலிக்காக மற்றும் ஒரு ஆய்வுப் புத்தகம்.

நேயர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் ஆய்வாளர்களிடம் இருந்து கட்டுரைகளை வரவேற்கிறோம். கட்டுரையை 30-11-2023 முன் அனுப்பி வைக்கலாம்.

தெரிவு செய்யப்படும் கட்டுரைகள் ISBN குறியீட்டுடன் வெளியிடப்படும்.


Research Book on All India Radio:
We are now publishing a book on All India Radio, following our success with BBC, China Radio International, Radio Veritas Asia, and Sri Lankan Broadcasting Corporation. We invite articles from radio listeners, journalists, and researchers. Submit articles by November 30, 2023, for publication in a book with an ISBN code.



Sunday, February 12, 2017

ஆகாஷ்வாணி, செய்திகள் வாசிப்பது...

காதோடுதான் நான் பேசுவேன்!

"ஆகாஷ்வாணி, செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண ஸ்வாமி. அமெரிக்காவில், ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த, தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., பூரண குணமடைந்து, ஓரிரு நாளில், சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது...' இந்த வார்த்தைகளை கேட்டவுடன், மனதுக்குள் வந்து செல்வது, வானொலியும், அந்த கணீர் குரலில் ஒலிக்கும் வசீகரமும் தான்.

வாட்ஸ் அப், பேஸ்புக், டிவிட்டர் என, நவீன தொழில்நுட்பத்தின் வளர்ச்சியில், அது காட்டும் மாயஜால காட்சிகளில், எந்தவிதமான ஆச்சரியங்களும் அற்றுப்போன மனிதர்களாக, நாம் மாறி வருகிறோம். 

"அட' என, எதையும் பார்த்து வியக்காத அளவுக்கு, மனித மனங்கள் மரத்து போய்விட்டன. ஆனால், 40 ஆண்டுகளுக்கு முன், வீடுகளில் ஒலிக்கும் வானொலி பாடல்களும், உரையாடல்களும், கேட்க இனிமையானவை. வானொலிக்குள் இருந்து வரும் உரையாடல்களை, பேச்சுகள், "வானொலிக்குள் யாரோ இருந்து கொண்டு பேசுகிறார்கள்,' என, அசட்டுத்தனமாக நினைத்த அப்பாவி மக்கள், நிறைய பேர் உண்டு.
இன்றைக்கு, 40 வயதை தாண்டிய பலருக்கும், வானொலி கேட்ட அனுபவங்கள், எப்போது நினைத்தாலும், பசுமையான நினைவுகளாக நெஞ்சில் நிழலாடி கொண்டிருக்கும். கம்ப்யூட்டர், "டிவி', மொபைல் போன் என, நாள் முழுவதும் ஏராளமான நேரத்தை, நாம் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அன்று வானொலி கேட்டதால் எந்த வேலையும் கெட்டதில்லை. வீட்டு வேலைகளை பெண்கள் செய்தனர்; உணவு சமைத்தனர்; கால்நடைகளை மேய விட்டனர். பாடல்களை கேட்டபடி, பூக்கடைகளில் பூத்தொடுத்தனர்; ஆண்கள், தங்களது பணிகளில் ஈடுபட்டுக்கொண்டே, வானொலியை ரசித்து வ(ச)ந்த காலம் அது. கிரிக்கெட் போட்டிகளின் போது, வானொலியில், "ஸ்கோர்' கேட்பது என்பது, அலாதியான சுகம்.

இன்று, பண்பலை எனப்படும் எப்.எம்., வானொலிகள் இருந்தாலும், பெரும்பாலும் பேச்சும், இரைச்சலான பாடல்களும் மட்டுமே கேட்க முடிகிறது. அந்நாளில், காலை, மாலை நேரங்களில் விவசாயிகளுக்கான அறிவிப்புகள், செய்திகள், பழைய, புதிய சினிமா பாடல்கள், நாடகம், புதினம் வாசித்தல், ஞாயிறு தினங்களில் திரைப்பட ஒலிச்சித்திரம், சிறுவர் பூங்கா, இசை நிகழ்ச்சிகள், கர்நாடக கச்சேரிகள், கல்வி நிகழ்ச்சி என, வானொலியில் கேட்டவை ஏராளம். புகை பிடிப்பது, மது அருந்துவது தவறு என, அந்த காலத்திலேயே அறிவுறுத்திய ஊடகம் வானொலி.தென்கச்சி சுவாமிநாதன் போன்றவர்களின் உரை, நேயர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவை. மக்களை சிந்திக்க வைப்பதோடு, கற்பனை வளத்தை அதிகரிக்க செய்ததில், அன்றைய வானொலியின் பங்கு அளப்பரியது. தேவையான தகவல்களை தருவது, தேச பக்தி, விழிப்புணர்வு என்பதே, வானொலியின் தலையாய கடமையாக இருந்தது.

தகவல் தொடர்பு துறையில் தாயாக விளங்கியது, வானொலி என்ற முதல் ஊடகம்தான்; ஆனால், "டிவி', கம்ப்யூட்டர், மொபைல்போன்கள், மக்களை நல்வழிப்படுத்துவதை காட்டிலும், தவறான பாதைக்கே, வழிநடத்துகிறது. வாழ்க்கை சீரழிவுகளை, காதில் கேட்க முடியாத, கண்ணில் பார்க்க கூடாத விஷயங்களை எல்லாம் காட்சிப்படுத்தி, மக்களை ரசிக்க செய்கிற ஒரு அவல நிலையை பார்க்க முடிகிறது.
வரும் 13ல், வானொலி தினம் கொண்டாடுகிறோம். வாரத்தில் ஓரிரு தினங்கள், ஆண்டுக்கு ஓரிரு மாதங்களாவது வானொலியை மட்டுமே கேட்பது, வீட்டில் வானொலியை ஒலிக்க செய்வது என்று, இந்நாளில் நாம் முடிவெடுக்க வேண்டும். பழுதுபட்ட நம் கண்களுக்கும், பாழடைந்த நம் செவிகளுக்கும் அருமருந்தாக, வானொலி அமையும் என்பதில் சந்தேகமில்லை. (நன்றி: தினமலர், 12 பிப். 2017)

Wednesday, June 15, 2016

ஆகாஷ்வாணி: இந்திய வானின் அசரீரி!

லையனல் பீல்டன் சென்னை வானொலி நிலையத்துக்கு வந்தபோது எடுத்தபடம். அருகில் அன்றைய நிலைய இயக்குநர் விக்டர் பரஞ்சோதி| படம். ‘தி இந்து' ஆவணக்காப்பகம்

‘ஆகாஷ்வாணி! செய்திகள் வாசிப்பது…’ என்று கனத்த மெளனத்தை உடைத்துக்கொண்டு ஒலிக்கும் குரலுடன் தொடங்கும் வானொலிச் செய்திகளைக் கேட்டு வளர்ந்தவர்களுக்கு, ஒலியுலகின் பொற்காலமான ‘அகில இந்திய வானொலி’யின் நாட்கள் என்றென்றும் நினைவில் இருக்கும். இன்றைக்கு, 418 நிலையங்களைக் கொண்டு உலகின் மிக முக்கிய ஊடகமாக செயல்பட்டுவருகிறது அகில இந்திய வானொலி. உலகின் மிகப் பெரிய பல்வேறு மொழி ஒலிபரப்புகளைக் கொண்ட ஒரே வானொலி எனும் தனித்த பெருமையும் உண்டு.

இந்தியாவில் வானொலி சேவை 1923-லேயே தொடங்கப்பட்டது. எனினும், ‘அகில இந்திய வானொலி’ என்ற பெயர் வைக்கப்பட்டது 1936 ஜூன் 8-ல்தான். அந்தப் பெயரை வைத்தவர் அகில இந்திய வானொலியின் முதல் இயக்குநரான லையனல் பீல்டன். அதன்படி, அகில இந்திய வானொலி தொடங்கப்பட்டதன் 80-ம் ஆண்டு இது. அதற்கு முன்னர் ‘இந்தியன் ஸ்டேட் ப்ராட்காஸ்டிங் சர்வீஸ்’ என்றே அது அழைக்கப்பட்டது. அகில இந்திய வானொலியின் லச்சினையை உருவாக்கியதும் லையனல் பீல்டன்தான். அப்போதைய வைஸ்ராய் கொடுத்த 2,50,000 ரூபாயை வைத்துக்கொண்டு, தனது முழு உழைப்பையும் பயன்படுத்தி, அகில இந்திய வானொலியை வளர்த்தெடுத்தவர் அவர். Read More