தினமும் 16 மணி நேரங்கள் ஒலிபரப்பாகும் இந்த வானொலிக்கு சேலம் மாவட்டம் முழுவதும் அத்தனை நேயர்கள். சமீபத்தில் அந்த வானொலியின் மூன்றாம் ஆண்டு விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. நிகழ்ச்சியை இலக்கியா அவ்வளவு அழகாகத் தொகுத்து வழங்கினார். திட்ட இயக்குநர் திரு.சுப்ரமணியம் மிகச் சிறப்பாக நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து இருந்தார்.
வள்ளியப்பா அறக்கட்டளையின் தலைவர் திரு.சி.வள்ளியப்பா ஆற்றிய உரையில் நேரடியாக நேயர்களின் தேவைகளைக் கேட்டறிந்து, நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களிடம் குறிப்பெடுத்துக் கொள்ளச் சொன்னார். கூடுதலாக நேரடியாக அனைத்து அறிவிப்பாளர்கள், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களையும் நேயர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
ஒரு சமுதாய வானொலியால் என்னவெல்லாம் செய்யமுடியும்? மலை வாழ் மக்களுக்கு சாலை வசதி, மருத்துவ உதவி, அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றது என்றால் நம்ப முடிகிறதா. ஏற்காடு மலை மீது அமைந்துள்ள 36 கிராம மக்களுக்கான ஒரே ஊடகமாக இந்த சேலம் சோனா எஃப்.எம் செயல்பட்டுவருகிறது.
எழுத்தாளர், ஆகாஷ்வாணியின் முன்னாள் பணியாளர் அகிலனோடு நெருங்கியத் தொடர்பு கொண்டவர் என்பதில் மிக்க மகிழ்ச்சி. தமிழகத்தில் வெற்றிகரமாக இயங்கிவரும் ஒருசில சமுதாய வானொலிகளில் இதுவும் ஒன்று என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment