Saturday, August 17, 2024

சென்னையில் இத்தனை வானொலிகளா?



சென்னையின் வானொலிகளுக்காக இந்தக் கருத்தரங்கத் தொடர்!

சென்னை தினத்தையொட்டி! மாணவர்களால், மாணவர்களுக்காக... சென்னையின் அரசு வானொலிகளின் கருத்தரங்கு வெற்றிகரமாக கடந்த வாரம்  நிறைவடைந்ததைத்  தொடர்ந்து, தற்பொழுது சென்னையின் தனியார் பண்பலை வானொலிகள், சமுதாய வானொலிகள் குறித்தக் கருத்தரங்கு.  அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்!

#

Friday, August 16, 2024

ஏ.வி.எம்மின் வானொலிப் பெட்டிகள்

 


எத்தனையெத்தனை வானொலிப் பெட்டிகள்!

ஏ.வி.எம் பாரம்பரிய அருங்காட்சியகத்தினை சமீபத்தில் சென்று காண்பதற்கான வாய்ப்பினை The Hindu - Made of Chennaiயின் வழியாக ஏற்பாடு செய்திருந்தனர். ரூ.200 மதிப்புள்ள நுழைவுச்சீட்டினை நமக்காக அவர்கள் எடுத்தார்கள்!

சென்னை தினத்தினையொட்டி இந்த நிகழ்ச்சியை திரிபுரசுந்தரி செவ்வேல் ஏற்பாடு செய்திருந்தார்கள். திரைப்படத் துறை சார்ந்த பொருட்கள் மத்தியில் பல்வேறு வகையான வானொலிப் பெட்டிகளைப் பார்த்து மகிழ்ந்தேன் எனலாம். ஒவ்வொரு வானொலிப் பெட்டியைப் பற்றியும் விஸ்வ பாரதியிடம் கூறிக்கூறி அகம் மகிழ்ந்தேன். அவற்றில் ஒரு சில...உங்கள் பார்வைக்காக...
































#

Wednesday, August 14, 2024

வானொலிக் கலவை

 

இரண்டு நிகழ்ச்சிகள்

ஒன்று சென்னை பெரம்பூர் அருகில் உள்ள மனவாளன் தெரு குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் சுந்தந்திர தின விழா கொண்டாட்டத்தில் "இந்திய விடுதலைப் போரில் வானொலியின் பங்கு" குறித்து உரையாற்றவுள்ளேன். புதிய தலைப்பு, புதிய பார்வை! எப்பொழுதும் புதிதாக சிந்திக்கும் எனது ஆசான் திரு.ராணி மைந்தன் அவர்களால் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாய்ப்பு இருப்போர் வருக!




அடுத்து நண்பர் அருண் அறிமுகம் செய்த குமரன் ஜெகதீசன் அவர்கள் ஏற்பாடு செய்த நிகழ்ச்சி. அவரின் பதிப்போவியத்தின் பின்னோட்ட (Retrospective) கண்காட்சியைத் தொடங்கி வைக்கிறோம். அச்சு பண்பாட்டில் பதிப்போவியத்தின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் வந்து கலந்துகொள்ளலாம்.

#


Monday, August 12, 2024

சென்னையின் வானொலிகள்

 


சென்னை தினத்தினையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகள் நகரில் நடந்துவருகிறது. நாமும் ஏன் ஒரு நிகழ்ச்சி நடத்தக்கூடாது, என்ற எண்ணத்தில் உருவானது தான் "சென்னையின் வானொலிகள்"

மூன்று நாள் நிகழ்வாக இதனைத் திட்டமிட்டோம். முதல் நாள் நிகழ்வு 13 ஆகஸ்ட் 2024 அன்று "சென்னையின்  அரசு வானொலிகள்" என்ற தலைப்பில் நடைபெற உள்ளது.

இரண்டாம் நாள் நிகழ்வு "சென்னையின் தனியார் வானொலிகள்" என்ற தலைப்பில் 20 ஆகஸ்ட் 2024 அன்று நடைபெற உள்ளது. இதில் சென்னையில் ஒலிபரப்பாகிய,  ஒலிபரப்பாகிவரும் தனியார் பண்பலை வானொலிகளை விவாதிக்கவுள்ளோம்.

மூன்றாம் நாள் நிகழ்வு 21 ஆகஸ்ட் 2024 அன்று "சென்னையின் சமுதாய வானொலிகள்" என்ற தலைப்பில் நடைபெறும். வானொலி ஆர்வலர்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.

#

All are cordially invited to a celebration of Radio in Madras, taking place tomorrow from 2:00 to 4:00 PM in the Seminar Hall, as part of the Madras Day week festivities.

Saturday, August 10, 2024

இலவசமாக டி.ஆர்.எம் வானொலிப் பெட்டி

 ரேடியோ மிர்ச்சி தொடங்கப்பட்ட புதிதில் 


தனது நேயர்களுக்கு இலவசமாக வழங்கிய எஃப்.எம் வானொலிப் பெட்டி இது. ஒரு வேலை தனியார் துறைக்கு டி.ஆர்.எம் ஒலிபரப்பு செய்ய அனுமதிக்கப்பட்டு இருந்தால், இது போன்று டி.ஆர்.எம் வானொலிப் பெட்டிகளையும் நேயர்களுக்கு  இலவசமாக தனியார் வானொலிகள் கொடுத்திருக்க வாய்ப்பு இருந்திருக்குமா?! 

Tuesday, July 30, 2024

ஆஹா எஃப்.எம் : இப்படியும் ஒரு விளம்பர உத்தி

 குமுதம் இதழோடு இந்த ஆறு பக்க விளம்பர இணைப்பினை 2012ல் வெளியிட்டபோது எல்லோரும் அதிர்ந்துவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். இந்த விளம்பரங்களை ஸ்ரீ ராம் கிரியேட்டிவ்ஸ் வடிவமைத்திருந்தார்கள். 
















Kumudam - Aahaa! FM Campaign, 6 Page Pullout AD & Press AD

Monday, July 29, 2024

பிபிசி டிஜிட்டல் ஊடகப் பயிற்சித் திட்டம்


 பிபிசியின் டிஜிட்டல் ஊடகப் பயிற்சித் திட்டத்தில் இணைய விருப்பமா?


இந்த டிஜிட்டல் ஊடகப் பயிற்சித் திட்டம் ஆறு மாதங்கள் கால அளவுடையது. பயிற்சிக் காலத்திற்கு உரிய ஊதியம் வழங்கப்படும். இதில் எப்படி இணைவது என்பது உட்பட இந்தத் திட்டம் குறித்து விரிவாக விளக்க எங்கள் குழு வரும் 30ஆம் தேதி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு வருகிறது. காலை 11 மணி முதல் மதியம் 1 மணிவரை நடக்கும் அமர்வில் கலந்து கொண்டு உங்கள் சந்தேகங்களை நீங்கள் கேட்கலாம். இந்த அமர்வில் கலந்து கொள்ள எந்த முன்பதிவும் தேவையில்லை. யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.