Monday, December 22, 2008

சீன வானொலி பொது அறிவுப் போட்டி


சீன வானொலி "அழகான சிச்சுவான்" பொது அறிவுப் போட்டியை தற்பொழுது வைத்துள்ளது. நேயர்கள் இணையம் வாயிலாக கலந்துகொள்ள சிறப்பு இணைய பக்கத்தினை வடிவமைத்து உள்ளது. அதன் முகவரி
http://210.51.185.203:8080/jingsai/English/Default.aspx?language=English

2 comments:

Karupps said...

வானொலி வறுவல்கள் 2- நள்ளிரவில் புதியவர்களின் கூத்துக்கள்
ஒன் எயார்/மைக்ஸ் ஒன்

வானொலிகளில் கலையகத்தில் நாங்கள் நிகழ்ச்சி அறிவிப்புக்களில் ஈடுபடும்போது, ஒலிவாங்கிகளை இயங்கக் செய்ய முதல் கலையகத்துக்குள் இருக்கும் மற்றவர்களை எச்சரிக்க பயன்படுத்தும் சமிங்க்ஜை வார்த்தை தான் "மைக்ஸ் ஒன்" அல்லது "ஒன் எயார்"(mic s on/on air).
இந்த சொல்லுக்குப் பிறகு எல்லோரும் மௌனம் சாதிக்கவேண்டும்-ஒலிவாங்கியில் பேசுவது தவிர.. அத்துடன் கலையகத்துக்கு வெளியே உள்ள சிவப்பு சமிக்ஞ்சை விளக்கு ஒன்று ஒளிர்ந்து உள்ளே ஒலிவாங்கியானது இயங்கிக் கொண்டிருக்கிறது, யாரும் உள்ளே இப்போது பிரவேசிக்கப் படாது என்று சொல்லும்.

சொல்லி சொல்லிப் பழகியதால் தனியாக நிகழ்ச்சி செய்யும்போதும், கலையகத்தில் யாரும் இல்லாத போதும் கூட நாங்கள் "ஒன் எயார்" சொல்லி மைக் ஒன் செய்வதுண்டு..
பழகி விட்டதே,,

ஆனாலும் சூரியனில் நான் இணைந்தபின் பத்துக்கும் மேற்பட்ட பயிற்சி அறிவிப்பாளர்கள் புதிதாக சேர்த்துக் கொள்ளப்பட்ட போது அவர்களுக்கு பயிற்சி அளிக்கும் சுகமான சுமை எனக்கும் வந்தது.

தேடல் உள்ளவர்களாகவும்,அதிக ஆர்வம் உள்ளவர்களாகவும் இருந்ததால் எங்கள் வேலை இலகுவாக இருந்தது.
வழமையாக மாதக் கணக்கில் எடுக்கும் பயிற்சியில் ஒரு சில நாட்களிலேயே தேறியவர்கள் இவர்கள்..

அப்படியும் சில சுவாரஸ்ய சறுக்கல்கள்..

சில பேர் முதல் தடவை அறிவிப்பில் ஈடுபட்டு விடை பெறும் போது தங்கள் பெயரையே மறந்து போனார்கள்..
இன்னும் சிலர் சந்தோஷப் பரபரப்பிலே செய்வதறியாது பேசவே தயங்கினர்.
இன்னும் ஒரு சிலர் செய்தது தான் வேடிக்கையின் உச்சக் கட்டம்.

"ஒன் எயார்" சொல்லாமல் ஒலிவாங்கியைத் திறக்க கலையகத்தில் இருந்த மற்றவர்களின் உரையாடல்கள் எல்லாம் சத்தமாகவோ,சன்னமாகவோ ஒலிபரப்பாகியது..

"சரியான குளிர் என்ன.. "
"அடுத்த பாட்டு ரெடியா?"
"நான் ஸ்டார்ட் பண்ணுறன்.. நீர் நேயருக்கு வணக்கம் சொல்லும்"
"கொத்து ரொட்டி ஒத்து வரல்ல போல"

இப்படிப் பல சுவாரஸ்யமான உரையாடல்களை அன்று நள்ளிரவு வேளையில் நீங்கள் கேட்டிருக்கலாம்.(நாம் புதியவர்களைத் தயார்படுத்த நள்ளிரவு நேரங்களைத் தெரிவு செய்தது அவர்களின் அதிக தடுமாற்றங்களை வெளிப்படுத்தாமல் இருக்கவே)

இன்னும் சில நேரம் ஒலி வாங்கி திறக்கப்பட்ட பின்னர் "ஒன் எயார்" சொன்னதும் உண்டு.. வெளியே இருந்து கேட்டுக் கொண்டிருக்கும் நமக்கு பற்றிக் கொண்டு வரும் கோபமும் எரிச்சலும்..

முதலில் சொல்லாமல் ஒலி வாங்கி திறந்ததுக்காக பிறகு "ஒன் எயார்" சொன்னாங்களோ..

ஆனால் இதே காலத்தில் இன்னொரு வானொலியில், செய்தி அறிக்கைக்கு முன்னர் ஒலிவாங்கியைத் திறந்து "மைக்ஸ் ஒன்" சொன்ன சுவாரஸ்யமான கதை உண்டு..

#################

முதலில் வழங்கியவன்

சூரியன் வானொலியில் நாம் பணிபுரிந்த காலத்திலே புதிய பாடல்களை யார் (எந்த வானொலி)முதலில் தருவது என்ற போட்டி சூடுபிடித்திருந்தது..(இப்போதும் இருந்தாலும், வெற்றியில் நாம் அதை பெரிது படுத்துவதும் இல்லை,நேயர்களுக்கும் அது எரிச்சல் ஏற்படுத்துவதை உணர்ந்து கொண்டோம்)

இந்தப் போட்டியில் நாமே அடிக்கடி வென்று கொண்டிருந்தோம்.. (இது வேரயா என்று கேட்காதீர்கள்.. அந்தக் காலத்தில் இது ஒரு திரில்)
புதிய பாடல் போட்டதும் "இந்தப்பாடலை முதலில் வழங்கியவன் உங்கள் முதல்வன் சூரியன் என்று நீட்டி முழங்குவோம்.." (பாடலுக்கிடையிலும் பறை தட்டி முழக்குவோம்)

பின்னர் அதை ஒரு பதிவு செய்யப்பட்ட ஒலிக்குறியாக பயன்படுத்த ஆரம்பித்தோம்(அடியேனின் குரலிலே தான்)

அதி தீவிர நேயர்களுக்கு (சூரிய வெறியர்கள் என்றே அன்பாகச் சொல்லலாம்) புதிய பாடல்களுக்கிடையில் இந்தக் குரல் ஒலிக்கும் பொது ஷக்தியை வென்றுவிட்ட சந்தோசம்.

இதற்காக நாம் முதலாவதாக ஒளிபரப்பாத பாடல்களுக்கிடையிலும் இந்த குரலை ஒலிக்கச் செய்து போட்டி வானொலி நண்பர்களை எரிச்சல் அடையச் செய்வதும் உண்டு.

(எத்தனை அநியாயம் செய்திருக்கிறோம்..)

இந்த நேரம் தான் வந்த ஒரு சில புதிய அறிவிப்பாளர்களை பழக்குவதற்காக இப்போது என்னோடு வெற்றியில் இருக்கும் அறிவிப்பாளர் ஒருவரை நியமித்தேன்.. (அவரு யாருன்னா ஹீ ஹீ.. நான்கு எழுத்துப் பெயருள்ள ஒரு கணினிக் கெட்டிக்காரர்)

அவரும் எல்லாம் சொல்லிக் கொடுத்து இப்போதும் பிரபலமாகவுள்ள (இவர்களும் இப்போது சூரியனில் இல்லை) நண்பர்களை தனியாக நிகழ்ச்சி செய்ய விட்டிருக்கிறார்.

அதிகாலை மூன்று மணிக்குப் பழைய பாடல்கள் ஒலிக்கும் நிகழ்ச்சியை தற்செயலாக தூக்கத்தில் எழும்பிக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு அதிர்ச்சி..
டி.எம்.எஸ்சும், பீ.பீ.ஸ்ரீநிவாசும் பாடும் பாடல்களுக்கிடையில் "இந்தப் பாடலையும் முதன் முதலாக வழங்கியவன் உங்கள் முதல்வன் சூரியன்"என்று எனது குரல் பைத்தியக்காரத் தனமாக ஒலிக்கிறது..

தொலைபேசியில் அழைத்து வானொலியில் பாவிக்க முடியாத வார்த்தைகளால் அர்ச்சனை செய்த பிறகே என் கோபமும் நின்றது.. என் குரலும் நின்றது..

இன்னும் கொஞ்ச வறுவல் பிறகு வரும்.. (நான் இந்த வறுவல் எல்லாம் வறுக்கலையா என்று நண்பர்கள் சிலர் கேட்டிருந்தார்கள்.. ஹீ ஹீ .. அதெல்லாம் இப்பவே சொன்ன எப்படி.. பிறகு சொல்லணுமில்ல)

Karupps said...

வெற்றி எப்.எம். இன் உத்தியோகபூர்வ இணையத்தளம்!
வெற்றி எப்.எம். இன் உத்தியோகபூர்வ இணையத்தளம்!
வெற்றி எப்.எம். ஒலிபரப்பை இப்பொழுது நேயர்கள் இணையத்தினூடாகவும் கேட்டுமகிழ முடியும். வெற்றி எப்.எம்.இன் உத்தியோகபூர்வ இணைய ஒலிபரப்பு இணைப்பு முகவரி : www.vettri.lk