Thursday, August 08, 2013

தந்தியடிக்கிறது தந்தி – 10

இந்தியாவில் தந்தி 


இந்தியாவில் 1855-ம் ஆண்டு தந்தி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சேவை இந்திய தகவல் தொடர்பில் மிக முக்கிய பங்காற்றி வந்தது. இது 1990-ம் ஆண்டு முதல் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. தகவல் தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியின் காரணமாக தந்தி சேவையின் பயன்பாடு தற்போது குறைந்துள்ளது. இதன் காரணமாக தந்தி சேவையை நிறுத்த பி.எஸ்.என்.எல் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான சுற்றறிக்கையை பி.எஸ்.என்.எல் தந்திப் பிரிவின் பொது மேலாளர் ஷமீம் அக்தார் வழங்கியுள்ளார்.
இந்த அறிக்கை அனைத்து தொலைத்தொடர்பு மாவட்டங்களுக்கும், வட்டார அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் தந்தி பதிவு அலுவலகங்கள் வரும் ஜூலை 15-ம் திகதிக்கு பின்னர் தந்திகளை பெறக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை முழுவதும் நிறுத்துவதற்கு பதிலாக, இதனை இந்திய தபால்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளிநாடுகளுக்கான தந்தி சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments: