Showing posts with label கனடா. Show all posts
Showing posts with label கனடா. Show all posts

Tuesday, January 16, 2024

புத்தக அறிமுகம்: வானொலி ஒலிபரப்பும் உத்திகளும்

 


இந்த சென்னைப் புத்தகக் காட்சிக்கு வானொலித் தொடர்பாக என்ன புத்தகம் வாங்களாம்  என்று கேட்பவர்களுக்கு நான் பரிந்துறைக்கும் புத்தகம் நடா இராஜ்குமார் எழுதிய "வானொலி ஒலிபரப்பும், உத்திகளும்".

கனடாவின் புகழ்பெற்ற தமிழ் வானொலியான East FM 102.7ன் தலைவரும் கனடா தமிழ் ஊடகத்துறையின் முன்னோடியுமான நடா இராஜ்குமாரின் மிக முக்கிய படைப்பு இது.

இந்த புத்தகத்தில் வானொலி வரலாறு, தமிழ் வானொலியின்  தொடக்கம், வானொலிக் கலை, அடிப்படை தகுதிகள், தொழில் நுட்பங்கள், தொகுப்பாளர்கள், நிகழ்ச்சி தயாரிப்பு, செய்தி தயாரிப்பு போன்ற அடிப்படை தகவல்களை தொகுத்து வழங்கியுள்ளார்.

அது மட்டுமல்லாது இந்த துறையில் வருபவர்களுக்காக உரை எழுதுதல், பேட்டி காணுதல், கலையகம், வானொலி நெறிமுறைகள், சவால்கள் மற்றும் உத்திகள், தற்போதைய தொழில்நுட்பம், நிலையத்தின் நிலைத்தன்மை, வானொலியின் எதிர்காலம் போன்ற தலைப்புகளில் விரிவாக எழுதியுள்ளார்.

"வானொலியில் தமிழ் ஆட்சி, வானமெங்கும் நமது ஆட்சி" என்ற முத்திரை சொற்றொடருடன் தொடங்கும் இந்த புத்தகம், வானொலித் தொடர்பாக இந்த வருடம் வெளிவந்துள்ள முக்கிய புத்தகமாகும்.

புத்தகம் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி:
East FM 102.7
151, Nashdene Road
Unit 17,18 Scarborough
Ontario M1V2T3
Canada


Saturday, January 13, 2024

சென்னைப் பல்கலைகழகத்தில் கனடா EAST FM தலைவர் நடா இராஜ்குமார்

 













சென்னைப் பல்கலைக்கழக இதழியல், தொடர்பியல் துறையில் கடந்த 10 ஜனவரி 2024ல் ஒரு முக்கிய கருத்தரங்கினை நடத்தினோம்.

"சர்வதேச கண்ணோட்டத்தில் தமிழ் வானொலிகள்" என்ற தலைப்பினில் இந்த கருத்தரங்கம் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக கனடாவின் புகழ்பெற்ற வானொலியான EAST FMன் தலைவர் திரு.நடா இராஜ்குமார் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்ச்சி தயாரிப்பு மற்றும்  தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை வழங்கினார்கள்.

குறிப்பாக கனடாவில் பணியாற்ற தேவையான தகுதி, என்ன மாதிரியான வேலை வாய்ப்பு உள்ளது, அதற்கு எப்படி தயாராக இருக்க வேண்டும் போன்றவற்றை சுவைப் பட தெரிவித்தார்கள்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, குரல் வளம் மிக்க மாணவர்களுக்கு தனது வானொலியில் வாய்ப்பினைத் தருவதாக வாக்குறுதி அளித்தார். இது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை அளித்தது.

இந்த நிகழ்வை சாத்தியமாக்கியவர் Siva Parameswaran . இந்த சமயத்தில் சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

எம்மோடு இணைந்து ஆய்வு மாணவர்கள் தீப்தி சுரேஷ் மற்றும் மெளலி பிரியா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்!


Thursday, April 23, 2009

ரேடியோ கனடா இண்டர்நேஷனல்: நாள்காட்டி


ஒவ்வொரு ஆண்டும், பல வானொலிகள் அழகான நாள்காட்டிகளை அனுப்பி வருகிறது. அந்த வரிசையில் தற்பொழுது கனடா வானொலி தனது நேயர்களுக்கு மாதாந்திர நாள்காட்டியை அனுப்பி வருகிறது. உலகெங்கும் உள்ள முக்கிய இடங்களை மையப்படுத்தி மாதத்திற்கு ஒன்றாகப் பதிப்பித்துள்ளனர். தரமான தாளில் அச்சிடப்பட்டுள்ள இந்த நாள்காட்டி தேவைப்படுபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய இந்திய முகவரி: Mr. Bill Westenhaver, English Section, Radio Canada International, Box 5207, Chanakyapuri, New Delhi - 110 003. E-mail: info@rcinet.ca