
அண்மைக் காலங்களில் சி.ஆர்.ஐ.யின் சக்தி வாய்ந்த ஆங்கில ஒலிபரப்பு ஐ.பி.சி. தமிழை இடையூறு செய்கிறது. அது ஏன்? (மும்பை சுகுமார்)
ஐ.பி.சி. நேயர்களுக்கு தெரியாத தகவல் ஒன்று, இங்கிலாந்தில் இருந்து ஐ.பி.சி. தமிழ் ஒலிபரப்பினாலும், அதன் ஒலிபரப்பிகள் அமைந்துள்ளது என்னவோ ஜெர்மனியில். அதே போன்று சீன வானொலியானது சமீபகாலமாக உலகெங் கும் தனது சிற்றலை வரிசைகளை நிறுவி வருகின்றது. இதில் குறிப்பிடத்தக்க ஒரு தகவல், ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தொலைத் தொடர்பு குழுமத்தில் சீன வானொலியானது உறுப்பு நாடாக இல்லை. இதனால் எந்த வித கட்டுப்பாடும் இன்றி, அனைத்து அலைவரிசைகளிலும் மிகுந்த சக்தியுடன் ஒலிபரப்பினைச் செய்து வருகிறது. இதனால் பல வெளிநாட்டு வானொலிகளின் ஒலிபரப்புகளில் தடை ஏற்படுகிறது. மேலும் உயர் சக்தி வாய்ந்த ஒலிபரப்பு கோபுரங்களை திபெத்தில் உள்ள லாசா பகுதியில் அமைத்துள்ளது. இந்த ஒலிபரப்பிகளின் மூலமே தமிழ் உட்பட ஏராளமான தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான ஒலிபரப்புகளைச் செய்து வருகிறது. வரும் காலங்களில் சி.ஆர்.ஐ-யும் சர்வதேச தொலைத் தொடர்பு குழுமத்தில் உறுப்பினராக சேரும் என நம்பலாம். - Sarvadesa Vaanoli Jan 2009