Saturday, May 24, 2008

அகில இந்திய வானொலிக்கு சர்வதேச பரிசு

ஈரானில் நடைபெற்ற 9-வது சர்வதேச வானொலி விழாவில் அகில இந்திய வானொலியின் நிகழ்ச்சிக்கு முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.அகில இந்திய வானொலியின் ஒரிசா சம்பல்பூர் ஒலிபரப்பு நிலையம் தயாரித்த 'ஜனிபா, ஆமே கமா கரிபா' (உலகளாவிய சிந்தனையும், உள்ளூர் செயல்பாடும்) என்ற சிறுவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஈரானில் நடந்த சர்வதேச வானொலி விழாவில் ஒலிபரப்பப்பட்டது. பத்மலோசன்தாஸ் என்ற நிகழ்ச்சித் தயாரிப்பாளர் ஒரிய மொழியில் இந்த நிகழ்ச்சியை தயாரித்திருந்தார்.வானிலை மாற்றங்கள், நாட்டின் வளங்களை பாதுகாத்தல் போன்ற விஷயங்களை தனது இரண்டு குழந்தைகளுக்கு ஒரு தாய் தாலாட்டாக போதிப்பது போன்று இந்த நிகழ்ச்சி அமைக்கப்பட்டிருந்தது. இதற்கு விழாவில் பெரும் வரவேற்பு கிடைத்த நிலையில் சிறந்த நிகழ்ச்சிகளுக்கான முதல் பரிசையும் தட்டிச் சென்றது.இதையொட்டி தயாரிப்பாளர் பத்மலோசன் தாஸுக்கு 2000 யூரோ ரொக்கப்பரிசும், தங்க விக்கிரகமும் பரிசளிக்கப்பட்டது. கடந்த 2007ல் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக ஈரான் வானொலி நடத்திய போட்டியிலும் சிறந்த நிகழ்ச்சிக்கான முதல் பரிசையும் தாஸ் வென்றது குறிப்பிடத்தக்கது. (Thanks to Thatstamil.oneindia.in)

No comments: