
திருநெல்வேலியைச் சேர்ந்த கரிசல் திரைப்படச் சங்கத்தின் சார்பாக பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கான விருது வழங்கும் விழா, சர்வதேச வானொலி என்ற இதழின் வெளியீட்டு விழா ஆகியவை, 25.4.2008 அன்று அண்மையில் தமிழகத்தின் திருநெல்வேலி மாநகரில் சிறப்பாக நடைபெற்றது.சங்கத்தின் தலைவர் அருண் கதாதரனும், துணைத் தலைவரும் தினேஷம் இணைந்து பம்பரமாகச் சுழன்று நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள் என்பதை நெல்லை மண்ணை மிதித்ததுமே புரிந்து போனது.நகரில் ஆங்காங்கே கரிசல் திரைப்படச் சங்கம் உங்களை வரவேற்கிறது என்று பாசத்துடன் அழைக்கும் துணி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஹலோ, சூரியன் ஆகிய பண்பலை எஃ.எம். வானொலிகளில் இந்த நிகழ்ச்சியைப் பற்றிய செய்திகளை இரு நாட்களுக்குத் தொடர்ந்து அவ்வப்போது ஒலிபரப்பினார்கள். விழாவில் பங்கேற்ற முக்கிய விருந்தினர்கள், விருது பெற்றவர்களின் பேட்டிகளும் அவ்வப்போது ஒலியேறியது.அனைத்துலக மூத்த தமிழ் ஒலிபரப்பாளர் எனும் பெருமையைப் பெற்றவரும், லண்டனில் உள்ள ஐபிசி வானொலியின் மூலம் உலகெங்கும் உள்ள தமிழர்களுடன் தன் குரலால் ஒன்றிக் கலந்தவருமான அப்துல் ஜபார்தான் நிகழ்ச்சியின் விஐபி.திரைப்படச் சங்கத்தின் நிகழ்ச்சிக்கு மாவட்ட அறிவியல் மையம் கைகொடுத்து உதவியது ஓர் ஆச்சரியம். இதற்கான விளக்கத்தை பின்னர் நிகழ்ச்சியில் பேசுகையில் தெரிவித்தார் மாவட்ட அறிவியல் அதிகாரி கோபாலகிருஷ்ணன். திரைப்பட இயக்குநர் மாரிமுத்து, நிழல் திருநாவுக்கரசு, பத்திரிகையாளரும் குறும்பட இயக்குநருமான அருள் எழிலன், சர்வதேச வானொலி இதழின் ஆசிரியர் ஜெயசக்திவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். (Thanks to tamil.Sify.com)
No comments:
Post a Comment