Thursday, January 10, 2013

சமுதாய வானொலி மூலம் 7 யூனியன் விவசாயிகள் பயன்

நாமக்கல்: ""வேளாண் அறிவியல் நிலையத்தில் அமையவுள்ள சமுதாய வானொலி மூலம், ஏழு யூனியன்களை சேர்ந்த விவசாயிகள் பயன்பெறுவர்,'' என, தொழில்துறை அமைச்சர் தங்கமணி பேசினர்.நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், சமுதாய வானொலி நிலைய அடிக்கல் நாட்டு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜகந்நாதன் தலைமை வகித்தார். தொழில்துறை அமைச்சர் தங்கமணி, 40 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ள சமுதாய வானொலி நிலைய கட்டிடத்திற்கு, அடிக்கல் நாட்டி பேசியதாவது:நாமக்கல்லில், விவசாயிகள் பயன்பெறும் வகையில், சமுதாய வானொலி நிலையம் அமைப்பது மகிழ்ச்சிக்குரியது. இதன் மூலம் கால சூழ்நிலைக்கேற்ப பயிர் செய்வது தேவையான தகவல்கள், தொழில்நுட்பம் ஆகியவற்றை அறிய முடியும். இதன் மூலம், ஏழு யூனியன்களைச் சேர்ந்த விவசாயிகள் பயன்பெறுவர்.இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, விலையில்லா ஆடு குறித்த விவரம் அடங்கிய கேஸட், திட்ட செய்தி மலர் வெளியிடப்பட்டது. மேலும், சிறந்த விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை துணைவேந்தர் பிரபாகரன், எம்.எல்.ஏ., பாஸ்கர், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழக மண்டல திட்ட இயக்குனர் பிரபுகுமார், மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் பழனிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.
Source: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=613502 / டிசம்பர் 25,2012

No comments: