Wednesday, January 30, 2013

ஜெயங்கொண்டத்தில் இருந்து சீனாவிற்கு

போதிசத்துவரும் லாமாக் கோவிலும்



நண்பர்களே எனது நான்காவது நாள் சீனப் பயணமாக நான் இன்று சென்ற இடம் லாமாக் கோவில். காலையில் நேயர் விருப்பம் நிகழ்ச்சிக்காக எனது விருப்பப் பாடல்களை பதிவு செய்தேன். அந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் சரஸ்வதி இன்று என்னுடன் அந்த நிகழ்ச்சியை பதிவு செய்தார்கள். 

அதன் பின் நாங்கள் இன்று மதியம் இந்தியன் கிட்சன் எனப்படும் இந்திய உணவுகள் மட்டுமே பரிமாறப்படும் உணவகத்திற்கு சென்றோம். என்னுடன் சரஸ்வதி மற்றும் மோகன் வந்தனர். மிகவும் அருமையான உணவு வகைகளை அங்கு சாப்பிட்டு மகிழ்ந்தோம். 

அங்கு ஜெயங்கொண்டத்தில் இருந்து வந்து சீனாவில் பத்து ஆண்டுகளாக பணியாற்றி வரும் செந்தில் நாதன் எனும் நண்பரை சந்தித்தேன். அவரிடம் நீண்ட நேரம் பேச்சுத்தமிழில் பேசியது மகிழ்ச்சியாக இருந்தது. அப்பொழுது நமது நண்பர் திரு.கலைவாணன் ராதிகா அவர்களை நினைத்துக் கொண்டேன். 

அந்த இந்தியன் கிட்சன் அமைந்துள்ள இடம் உலகின் அனைத்து நாடுகளின் தூதரகங்கள் அமைந்துள்ள அதிமுக்கியப் பகுயாகும். இதனால் அங்கு பல்வேறு நாட்டினரைக் காண முடிந்தது. 

அதன் பின் நாங்கள் சென்றது லாமா கோவில். மிகவும் அருமையான, அமைதியான கோவில். அங்கு நம் நாட்டில் கோவில்களில் பக்தி ஏற்றுவது போன்று, இங்கும் புத்த பெருமானுக்கு வரும் பக்தர்கள் பக்தி ஏற்றுகிறார்கள். மிகவும் அருமையான வாசனை அதில் வருகிறது. நம் ஊர் பக்தியைப் போல் அல்லாது, இது மிகப் பெரிதாக உள்ளது. அதில் பல்வேறு உருவங்கள் அச்சிடப்பட்டுள்ளன. 

No comments: