Wednesday, January 16, 2013

தியென்மென் சதுக்கத்திலும் அரண்மனை அருங்காட்சியகத்திலும்



மூன்றாவது நாள் நான் சென்ற இடங்களைக்கூறும் முன் இரண்டாம் நாள் நான் சீனப் பெருஞ்சுவரில் கண்ட அந்த அதிசயக் காட்சி பணி. ஆம், அந்தச் சுவர்களின் ஓரத்தினில் மலைகளின் மீது பணிக்கட்டிகள் உறைந்து காணப்பட்டது. சீனப் பெருஞ்சுவரின் மேலே செல்லச் செல்ல பணிகாற்றின் வேகம் அதிகமானது. மூச்சு விடவும் கொஞ்சம் சிரமமாக இருந்தது. அதனை விரிவாக பிரிதொருப் பதிவில் உங்களோடு நிச்சயம் பகிர்ந்து கொள்கிறேன். அன்று மதியம் நாங்கள் சென்ற இடம் ஒலிம்பிச் போட்டிகள் நடைபெற்ற பறவைக் கூடு மைதானம். பணியுடன் அதிகமானக் காற்று அடித்ததால் விரிவாகக் காண முடியவில்லை. ஆனாலும் ஒரு பிரம்மாண்ட கட்டிடத்தினை பார்த்த மகிழ்ச்சி மனதில்.

மூன்றாம் நாள் பயணம் பீஜிங் நகரத்தில் மேற்கொண்டோம். காலையில் சென்ற இடம் ஒரு வாரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தத் தெரு. சீனாவின் பண்டைய காலத்தில் வியாபாரத்திற்காக பயன்படுத்தப்பட்ட அந்தத் தெருவினை இன்றும் அதேப் போன்று பாதுகாத்து வருகின்றனர். தியென்மென் சதுக்கத்திற்கு அருகில் அமைந்துள்ள அந்தத் தெருவில் அன்றைய காலகட்டத்தில் கிடைத்த உணவுகளை இன்றும் அந்த உணவு விடுதிகளில் தாயாரிக்கப்பட்டு வினியோகிக்கப்படுகின்றன. அங்கே இருந்த அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் அலுவலகத்தில் சீனாவில் வெளியிடப்பட்ட அரியத் தபால் தலைகளைப் பார்வையிட்டேன். இரண்டு அஞ்சல் அட்டைகளை அங்கு வாங்கி இந்தியாவிற்கு அந்தத் தெருவின் நினைவாக அனுப்பினேன். அதன் பின் நாங்கள் சென்றது அதன் அருகில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தியென்மென் சதுக்கம். மிகவும் அருமையாகப் பராமரிக்கப்பட்டுவரும் அந்த இடத்தினில் மாசெதுங் அவர்களின் நினைவிடம் உள்ளது. நாங்கள் மதியம் 12.30க்கு சென்றதால் அதனை மூடிவிட்டார்கள். 

No comments: