சர்வதேச நேயர்களின் பேராதரவுடன் அகில இந்திய வானொலி, திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதத்தில் 90 வாரங்கள் ஒலிபரப்பான வானொலி உலகம் மீண்டும் புது வடிவில் முப்பது நிமிடங்களாக ஒலிபரப்ப தொடங்கியுள்ளோம். திருநெல்வேலி ஞானவாணி 105.6 பண்பலையில் ஒலிபரப்பாகும் அதே சமயத்தில் இந்த நிகழ்ச்சியை இனி இணையத்திலும் நீங்கள் கேட்கலாம். ஆண்ட்ராய்டு கைப்பேசி வைத்திருப்பவர்களும் இந்த நிகழ்ச்சியை ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமைகளில் கேட்கலாம்.
இணைய முகவரி https://soundcloud.com/radioworld
சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Thursday, August 08, 2013
தந்தியடிக்கிறது தந்தி – 10
இந்தியாவில் தந்தி
இந்தியாவில் 1855-ம் ஆண்டு தந்தி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சேவை இந்திய தகவல் தொடர்பில் மிக முக்கிய பங்காற்றி வந்தது. இது 1990-ம் ஆண்டு முதல் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. தகவல் தொழில் நுட்பத்தின் அசுர வளர்ச்சியின் காரணமாக தந்தி சேவையின் பயன்பாடு தற்போது குறைந்துள்ளது. இதன் காரணமாக தந்தி சேவையை நிறுத்த பி.எஸ்.என்.எல் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான சுற்றறிக்கையை பி.எஸ்.என்.எல் தந்திப் பிரிவின் பொது மேலாளர் ஷமீம் அக்தார் வழங்கியுள்ளார்.
இந்த அறிக்கை அனைத்து தொலைத்தொடர்பு மாவட்டங்களுக்கும், வட்டார அலுவலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் தந்தி பதிவு அலுவலகங்கள் வரும் ஜூலை 15-ம் திகதிக்கு பின்னர் தந்திகளை பெறக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை முழுவதும் நிறுத்துவதற்கு பதிலாக, இதனை இந்திய தபால்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளிநாடுகளுக்கான தந்தி சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Source;http://www.tamilcnn.org
Wednesday, August 07, 2013
சீன வானொலி தெற்காசிய பிரிவின் தலைவருடன்
முன்னாள் நிபுனர் திரு.கடிகாச்சலம்
திரு.செல்வம் மற்றும் திரு. நாச்சிமுத்து ஒரு மகிழ்ச்சியான தருணத்தில்
சீனாவில் நேயர்களின் 6-ஆம் நாள் பயணம்
இரவு ஓவியா அவர்களுடன் இணைந்து தாதொங் நகரின் தனிச்சிறப்புமிக்க உணவு வகைகளை சாப்பிட்டு மகிழ்ந்தோம். சாப்பாட்டு மேசையில் உள்ள மின்அடுப்பில் கார நீரைக் கொதிக்க வைத்து, அதனுள்ளே மாட்டிறைச்சி, வாத்து இரத்தம், இனிப்பு உருளைக் கிழங்கு, தோஃபு, காளாண், கருப்பு நிறக் காளான், கோசுக்கீரை உள்ளிட்ட 6 வகை காய்கறிகள் ஆகியவற்றை வேகவைத்து சூடாக சாப்பிட்டோம். இது ஒரு வேறுபட்ட அனுபவமாக இருந்தது. நாளை காட்சியிடங்களுக்குப் பயணம் செய்து, விரிவான தகவல்களை வழங்குவோம்.
சீன வானொலி மென்ஒருங்கு ஆய்வு
APP எனப்படும் மென்ஒருங்கு ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பற்றிய உங்கள் கருத்து
சீன வானொலி தமிழ் இணையத்தை பல்வகையான கைபேசிகளிலும் உலா வந்து படிக்கும் வசதி அளிக்க, தமிழ்ப் பிரிவு தற்போது APP எனும் மென்ஒருங்கு ஒன்றை ஆய்வு செய்து உருவாக்கி வருகிறது.
நேயர்கள், இணையதளப் பயனர்கள் அனைவரும் இதுப்பற்றி எங்களுக்கு ஆலோசனை அளிப்பதை எதிர்பார்க்கிறோம். எந்த விதமான முன்மொழிவு இருந்தாலும் , tamil@cri.com.cn என்ற மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் கருத்துக்களை அனுப்புக.
மேலும், கருத்துக்கணிப்பு ஒன்று
1, உங்கள் கைபேசியின் இயங்குதளம் என்ன?
A/ஐஒஎஸ் IOS
B/அண்ட்ராய்டு Android
C/வின்டோபோன்WindowPhone
D/பிற
2, தமிழ்ப் பிரிவு எதிர்காலத்தில் வெளியிடும் மென்ஒருங்கில் இடம்பெற வேண்டுமென நீங்கள் எதிர்பார்க்கும் தகவல்கள் என்னென்ன?
A/செய்திகள்
B/சுற்றுலா மற்றும் பண்பாடு
C/கேட்பொலி மற்றும் காணொலி
D/வணிகம் சார்ந்த தகவல்கள்
E/பிற
நன்றி: http://tamil.cri.cn
Tuesday, August 06, 2013
Monday, August 05, 2013
கண்பார்வையற்றவர்களுக்கு வானொலி ஒலிபரப்பு இதழியல் டிப்ளமோ படிப்பு
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கண்பார்வையற்றவர்களுக்கான தேசிய கல்வி நிறுவனத்தில், பட்டயப் படிப்புக்கு சேர்க்கை நடைபெறுகிறது.
வழங்கப்படும் படிப்பு: Diploma Course in Radio Broadcast Journalism
கால அளவு: ஒரு வருடம்
வயது வரம்பு: 18 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும்.
அடிப்படை கணினி தெரிந்திருக்க வேண்டும். ப்ரெய்லி முறையில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும். படிப்பை வெற்றிகரமாக முடித்த பிறகு Announcer, Presenters Radio Programme Producers & Script Writer Programme Producer Script Writer, Sound Editor ஆக பயிற்சியாளராக பணியாற்றலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: விண்ணப்பப் படிவங்களின் பரிசீலனைக்கு பின் தகுதியானவர்கள் ஆடிஷன் தேர்வு மற்றும் அதனை தொடர்ந்து நேர்முகத் தேர்வுகளுக்கு அழைக்கப்படுவர். மெரிட் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nivh.org.in என்ற இணையதள முகவரியில் இருந்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
Source: Dinnamani 01 August 2013
Subscribe to:
Posts (Atom)




