Monday, August 26, 2013

ஆகஸ்ட் முதல் நாள் பொன்விழா கண்டது சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு

தற்போது சிற்றலையில் வெளிநாடுகளிலிருந்து ஒலிபரப்பாகிடும் தமிழ் ஒலிபரப்பில் நேயர்களிடம் சிறப்பிடம் பெறுபவை சீன வானொலி தமிழ்ப்பணி, பி பி சி தமிழோசை, வேரித்தாஸ் வானொலி ஆகியவை எனலாம்.
இதில் சீன வானொலி தமிழ்ப் பணி அதிகபட்சமாக தனது ஒரு மணி நேர நிகழ்ச்சிகளை தினமும் நேயர்களுக்கு அளித்து வருகிறது. அதோடு அந்த நிகழ்ச்சிகளை மீண்டும் மூன்று முறை மறு ஒலிபரப்பும் செய்து வருகிறது. தற்போது இரவு 0730 மணிக்கு 13600 Khz, 11635 Khz ல் ஒலிக்கும் அதன் முதல் ஒலிபரப்பினை அதேநாள் இரவு 0830 மணிக்கு 9490 khz,11800 Khz லும்  மறுநாள் காலை 0730 மணிக்கு 13600 Khz, 15260 Khz லும் காலை 0830 மணிக்கு 13600 khz,13730 Khz லும் மறு ஒலிபரப்பாகவும் கேட்க முடியும். தவிர அதன் நிகழ்ச்சிகளை இணயதளம் மற்றும் இணயதள வசிதிகொண்ட செல் போன்கள் வாயிலாகவும் கேட்க முடியும் அதன் இணயதளம் மூலம் எண்ணற்ற தகவல்களை வாசிக்க,பார்க்க இயலும்.சீ’ன வானொலி தமிழ்ப் பணி 1963 ல் ஆகஸ்ட் முதல் துவங்கபெற்றது. தற்போது ஐம்பது வருடங்களை நிறைவு செய்து பொன்விழா கண்டது. பதினெட்டு பணியாளர்கள் அதன் தமிழ் பணியில் வெவ்வேறு நிகழ்ச்சிகளை வழங்கிவருகின்றனர் இதில் பதினாறு பணியாளர்கள் சீனர்கள், பெரும்பாலோனோர் இளைஞர்கள்.
கட்டுரை, பொது அறிவு போட்டிகளை அவ்வப்போது நடத்தி நேயர்களை அதில் பங்கேற்க செய்து வெற்றி பெற்றோருக்கு பல்வேறு பரிசு பொருள் சான்றிதழ்களை நேயர்களுக்கு வழங்குகிறது போட்டியில் சிறப்பு தேர்வு பெற்ற நேயர்களை சீனாவிற்கு இலவச பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பினை வழங்கி மற்ற வெளிநாட்டு வானொலிகளிடமிருது சீன வானொலி தமிழ்ப் பணி வேறுபட்டு சிறப்பிடம் பெறுகிறது. அந்த வாய்ப்பினை பல நேயர்கள் பெற்று பயனடைந்துள்னர். அவர்கள் இன்றும் தொடர்ந்து சீன வானொலி தமிழ்ப் பணிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். சீன வானொலி தமிழ்ப் பிரிவின் பொன்விழாவை முன்னிட்டு, உலகளவில் சீன வானொலி தமிழ்ச் சேவையின் செல்வாக்கு எனும் கருத்தரங்கு பெய்ஜிங்கிலுள்ள இந்திய தூதரகத்தில் ஆகஸ்ட் 3ஆம் நாள் நடைபெறுகிறது. இக்கருத்தரங்கில் சீனாவுக்கான இந்தியா, இலங்கை மற்றும் சிங்கபூர் தூதாண்மை அலுவலர்களும் தமிழக நேயர்கள் வளவனூர் புதுப்பாளையம் எஸ். செல்வம், ஈரோடு பகலாயூர் பி.ஏ.நாட்சிமுத்து, சீனச் சமூக மற்றும் அறிவியல் கழகத்தின் நிபுணர்களும், தமிழ்ப் பிரிவின் மூத்தப் பணியாளர்களும் அழைப்பின் நேரில் கலந்து கொள்கிறார்கள். இக்கருத்தரங்கு பற்றிய சிறப்பு நிகழ்ச்சி ஆகஸ்ட் 5ஆம் நாள் முதல் வழங்க உள்ளது.
மேலதிக விபரங்களை tamil.cricri.cn என்ற அதன் இணயதளத்தில் பெறலாம். By மு.கணேசன் (கோவா)
Source: http://dinamani.com/world_tamils

1 comment:

M GANESAN said...

Only after Seeing your post I came to know the information that it was appeared in Dinamnai Page.

Thanks for the Post.

Regards
M.GANESAN