Saturday, May 30, 2009

சூரியப்புள்ளியும் சிற்றலை வானொலியும்: பகுதி - 3

ஒளியின் வேகம் 1 வினாடிக்கு 30 லட்சம் கி.மீ. 1 வினாடியில் 3 லட்சம் கி.மீட்டரை கடக்கும் ஒளி ஒரு ஆண்டில் அதாவது (365X24X3600) வினாடியில் கடக்கும் கி. மீட்டரில் (315 மி.கி.மீ) அதாவது 31 கோடியே 53 லட்சத்து 60 ஆயிரம் கி.மீ. ஆகும். அந்த ஆரம்ப சூரியர்களின் மையத்திலிருந்து புறப்பட்ட ஒளி, அதன் உடலை விட்டு வெளியே வருவதற்கே 50 ஆண்டுகள் பிடிக்கும் என்றால் அவற்றின் உருவ அளவை எண்ணிப் பாருங்கள்.

இதன் காரணமாகவே, அவற்றில் நீடித்து வாழ முடியவில்லை. வெகுவிரைவில் வேகமாக எரிந்து அணைந்துவிட்டன. நமது சூரியன் 10 மில்லில்யன் (10 நூறு கோடி) அதாவது, ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு நின்று எரியக்கூடியது (ஏற்கனவே சுமார் 5 பில்லியன் ஆண்டு வாழ்க்கை முடிந்து விட்டதால் நம் சூரியன் நடுவயதில் உள்ளான்) இன்னும் 5 மில்லியன் ( 5 நூறு கோடி அல்லது 500 கோடி) ஆண்டுகளுக்கு சூரியன் வெப்பத்தை உமிழ்ந்தபடி இருப்பான்.

ஆனால் ஆதி சூரியன்கள் ஒரு மில்லியன் ஆண்டுகளே எரிந்து வாழ்ந்து, சூப்பர் நோவாக்களாக வெடித்து அல்லது கரும்துளைகளாகச் சுருங்கிப் போய் விட்டன. அவை சூப்பர் நோவா-ஆக பெரும் தீப் பிழம்புடன் வெடித்து சிதறி வெளியிட்ட பொருட்கள் திரண்டுதான் இன்றைய சூரியர்கள் உருவானார்கள். சூரியன்கள் என்பது நமது சூரியன் மட்டுமல்ல, சூரியனைப் போல் பல லட்சம் மடங்கு பெரிதான நட்சத்திரங்களையும் சேர்த்துத் தான். எனவே பலமுறை ஏற்பட்ட சூப்பர் நோவாக்களின் வெடிப்பாலும் கரும்துளைகளாலும் பல விண்மீன்கள் தோன்றின. நாம் இன்று பார்த்துக் கொண்டு இருக்கும் ஆகாய விண்மீன்கள் இரண்டாம், மூன்றாம் அல்லது நான்காம் சந்ததிகளான சூரியர்களே ஆவார்கள். (நம் குடும்பத்தில் மகன், பேரன், கொள்ளுப்பேரன் என்பதைப் போல்.
தொடரும்...
- கிழக்கு தாம்பரம் வி. பாலசுப்ரமணி, அலைபேசி: 99520 67358

Thursday, May 28, 2009

சீன வானொலியின் இலவச பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்ட தமிழக நேயர்


சீனப்பயண‌த்தின் தொடர்ச்சியாக மே‍‍ 27ஆம் மாலை சிச்சுவான் தலைநகரில் அமைந்துள்ள மூன்று லட்சம் சதுரமீட்டர் அளவில் அமைந்துள்ள வரலாற்று புகழ் மிக்க அருங்காட்சியத்தை பார்த்தேன். என்னுடன் தலைவர் தி.கலையரசி அவர்கள் வந்ததால், பல விளக்கங்களை அவர் தெரிவித்தது பயன்மிக்கதாய் இருந்தது. இந்த அருங்காட்சியைப் பார்த்தால் பண்டைய மக்களின் வாழ்க்கை நிலையை தெரிந்துகொள்ள‌ வாய்ப்பு உண்டு. மூவாயிரம் ஆண்களுக்கு முந்தைய சீன சுச்சுவான் வரலாற்றை நினைவு படுத்தும் இந்த அருங்காட்சியகத்தில், பழங்கால‌ மாதிரி கிராமம் ஒன்று தத்துரூபமாக அமைக்கபட்டு, அன்றைய மக்கள் வாழ்ந்த எளிமையான சூழலை நினைவுபடுத்துகிறது.

அருமையான சிச்சுவான் என்று உலகளவில் நடத்தப்பட்ட பொது அறிவுப் போட்டியின் பரிசு வழங்கும் நிகழ்ச்சி, 27ம் நாள் சாங் து நகரில் நடைபெற்றது. இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, பிரேசில், ருமேனியா, தென்கொரியா உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த நேயர்கள், சிறப்பு பரிசுகள் பெற்றனர். அவர்கள் சிச்சவான் மாநிலத்தின் சில சுற்றுலா இடங்களுக்குச் சென்று அங்குள்ள அழகான காட்சிகளை கண்டு ரசிப்பார்கள்.

• சிச்சுவான் தலைநகரிலிருந்து முனுகப்பட்டு பி.கண்ணன்சேகர் 2009-05-28
• பரிசளிப்பு விழாவில் கண்ணன் சேகர் 2009-05-27
• சிறப்பு நேயரின் உணர்வு 2009-05-27
• தியெனான்மென்னில் சிறப்பு நேயர் 2009-05-26
• பெய்ஜிங் வந்தடைந்த முனுகப்பட்டு பி. கண்ணன் சேகர் 2009-05-24
தியெனான்மென்னில் சிறப்பு நேயர்
ஒலிப்பதிவுக் கூடத்திலிருந்து முனுகப்பட்டு. பி. கண்ணன் சேகர் பேசுகிறேன்
பெருஞ்சுவர் பற்றி

(Source: http://tamil.cri.cn/1/2009/05/27/104s85218.htm)

சூரியப்புள்ளியும் சிற்றலை வானொலியும்: பகுதி - 2

கதிர்வீச்சு முதலில் வெடிப்புடன் துவங்கி, 400,000 ஆண்டுகள் கழித்து பிரபஞ்சம் குளிர்ந்து இருளடையத் துவங்கியது. உற்பத்தியான ஹைட்ரஜன் அணுக்கள் எல்லா கதிர்களையும் உறிஞ்சிக் கொண்டன. பரவெளி எங்கும் சமமாய், அணுவிற்கும் அடிப்படை நிலையில் உள்ள ஒரே பொருள் பரவியிருந்தது. அதற்கு சுயஒளி இல்லாததால் எங்கும் இருள் சூழ்ந்து இருந்தது. மெல்ல மெல்ல அப்பொருள் இணைந்து முதல் அணுவாகிய ஹைட்ரஜனுடன் தோன்றியது. அந்தத் தோற்றத்தின் போது ஆகாயமெங்கும் நுண்அலையாக மின்காந்த ஆற்றல் வெளிப்பட்டது. எனவே, ஆரம்ப காலத்தில் பரவெளியில் ஆதி அணுவான ஹைட்ரஜனும், கூடவே வெளிவந்த மின்காந்த அலையுமே பரவி இருந்தது. வெளிச்சமும் ஒரு துளிகூட இல்லை. இப்படியே 100 மில்லியன் ஆண்டுகள் ஆகாயம் ஒரு நட்சத்திரமும் இன்றி ஒரே சமமாக கிடந்தது.

பிறகு, ஆங்காங்கே ஆற்றல் நிலைகளில் ஏற்பட்ட தடுமாற்றங்களால், சீராகப் பரவியிருந்த ஆகாயத்தில் (திரிந்து போன பால் கெட்டித் தட்டுவது போல்) ஆதி தாரகைகளின் விதைகள் உருவாயின. அந்த விதைகளை நோக்கி பொருட்கள் குவியக் குவிய அவை பெரிதாகி விண்மீன்களாயின. அவ்விண்மீன்களின் நடு இதயப்பகுதியில் ஏற்பட்ட நெரிசலால் பொருள்கள் இணைந்து அணுக்கரு இணைப்பாற்றல் துவங்கி அதன் பயனாக ஆகாயத்தில் காமா கதிர்வீச்சுடன் முதல் ஒளி தோன்றியது. எங்கும் பிரகாசமாக தாரகைகள் ஜொலிக்க ஆரம்பித்தன. (அறிவியலில் அணுக்கரு இணைப்பாற்றல் பற்றி அறிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் சமன்பாடு, மேக்ஸ் பிளாங்கின் குவான்டம் கொள்கை உதவுகின்றன)
நம் பூமியைப்போல் பல லட்சம் மடங்கு பெரிதாக உள்ள சூரியனையே நாம் கண்டு வியக்கிறோம். ஆதி தாரகைகள் நம் சூரியனைப் போல் இன்னும் 100 ஆயிரம் முதல் பல மில்லியன் (10 லட்சம்) மடங்கு பெரிதானவை. அவற்றின் குறுக்களவு 10 முதல் 100 ஒளி ஆண்டுகள் விரிந்திருந்தது. (1 ஒளி ஆண்டு என்பது ஒளி அதன் வேகத்தில் ஒரு ஆண்டில் கடக்கும் தூரம்)
தொடரும்...
- கிழக்கு தாம்பரம் வி. பாலசுப்ரமணி, அலைபேசி: 99520 67358

Tuesday, May 26, 2009

சூரியப்புள்ளியும் சிற்றலை வானொலியும்: பகுதி - 1


அன்பான நண்பர்களே!
சர்வதேச வானொலி இதழின் மூலம் மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. தமிழ் கட்டுரைகள் எழுதிய அனுபவம் அதிகம் இல்லாததனால் என் கட்டுரையில் பிழைகள் இருப்பின் மன்னிக்கவும். வானொலி சம்பந்தமான பல தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவை உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என கருதுகிறேன்.

நம்மில் பலருக்கு நம் பூமி, மற்ற கோள்கள், சூரியன், விண்மீன்கள் எவ்வாறு தோன்றின என்று அறிவியல் அடிப்படையில் தெரிந்திருக்க நியாயம் இல்லை. நிலம், நீர், காற்று, தீ, ஆகாயம் ஆகிய ஐந்து (பஞ்சம்) க்கும் அப்பாற்பட்டு விரிந்திருக்கும் ஒன்றை விஸ்வம் - பிரபஞ்சம் என்கிறார்கள். இந்த சொல் பிரபஞ்சம் அறிவியலிலும் அதே பொருளில் பயன்படுத்தப்படுகிறது. பனிக்காலங்களில் காலையில் வீட்டின் சன்னல் கதவுகளைத் திறந்து சூரிய ஒளியை அனுமதிக்கும் போது புகைபோன்று காற்றில் உள்ள புழுதி எழுதுவது போல தோன்றும் காலியான ஒரு அறையில், காற்றில் தூசிகள் அந்தரத்தில் நிற்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த தூசிகளில் ஒன்றுதான் நமது சூரியன். பூமி, நிலா ஆகிய கோள்களும் மற்ற தூசிகள் பிற நட்சத்திரங்கள் அதாவது வேறு சூரியன்களாகும். இந்த தூசிகளைத் தவிர்த்து மீதி இருக்கும் காலி இடத்தை பிரபஞ்சம் என்கிறோம். அறைக்கு நான்கு சுவர்கள் என்ற எல்லை வரம்பு உள்ளது. ஆனால் பிரபஞ்சத்துக்கு அம்மாதிரி எல்லை ஏதுமில்லை. அது எப்போதும் விரிந்து சென்று கொண்டே இருக்கிறது.

அமாவாசை இரவில் நாம் வானத்தில் காண்பது பல்லாயிரம் நட்சத்திரங்கள். ஆனால் அவை அனைத்தும் நமது ஆகாய வெளியில் அண்டையிலிருக்கும் ஒரு சிறு பகுதியே. இன்னும் பல கோடி தாரகைகள் ஆகாயமெங்கும் பல பில்லியன் ஒளியாண்டுகள் பரப்பளவுக்கு பரவி உள்ளது. அவற்றை நம்மால் பார்க்க முடியாது. சிறந்த தொலைநோக்கி மூலமும், ஹப்புள் போன்ற விண்வெளி தொலைநோக்கி மூலம் நாம் பல புதிய நட்சத்திரக் குவியல்களைக் கண்டு பிடித்துள்ளோம். இந்தக் குவியல்களைத்தான் கேலக்ஸி (உடு மண்டலம்) என்கிறோம்.

வைரங்களை வாரி இரைத்தது போல் கண்சிமிட்டும் நட்சத்திரங்கள் அடங்கிய நமது ஆகாயம் ஒரு காலத்தில் இருண்டு கிடந்தது. கிட்டத்தட்ட 12 அல்லது 15 பில்லியன் (10 அல்லது 100 கோடி) அதாவது 1200 முதல் 1500 கோடி ஆண்டுகளுக்கு முன் இந்த ஒட்டுமொத்த ஆகாயமும் அதில் நிரம்பியுள்ள சகல ஒளி ஒளியற்ற பொருட்களும் ஒரு புள்ளியிலிருந்து பெரு வெடிப்பால் வெடித்துக் கிளம்பின என்று அறிவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்த பெருவெடிப்புக்குப்பின் விரிந்த ஆகாயம் 100 மில்லியன் அல்லது நூறு கோடி ஆண்டுகளுக்கு இருண்டு கிடந்தது. தொடரும்...


- கிழக்கு தாம்பரம் வி. பாலசுப்ரமணி, அலைபேசி: 99520 67358

Wednesday, May 20, 2009

'பெண்மை வாழ்க' புத்தகமாக


வேரித்தாஸ் தமிழ் பணியில் ஒலிபரப்பான 'பெண்மை வாழ்க' நிகழ்ச்சி தற்பொழுது 110 பக்கங்கள் கொண்ட புத்தகமாக வெளியாகியுள்ளது. இதனை எழுதியவர் திரு. பா.மூர்த்தி. இவர் தற்பொழுது புதுக்கோட்டை மாவட்ட காவல் துறைக் கண்கானிப்பாளராக பணியாற்றி வருகிறார். இந்த நூலானது முற்றிலும் இலவசமாக நேயர்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. நூல் தேவைப்படுபவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:
அருட்தந்தை. டென்னிஸ் வாய்ஸ்,
துணை இயகுனர்,
சாந்தோம் கலைத்தொடர்பு நிலையம்,
150, லஸ் கோவில் சாலை,
மயிலாப்பூர்,
சென்னை - 600004.

பிபிசி தமிழோசைக்கு பிரபாகரன் அவர்கள் கடந்த காலங்களில் வழங்கியுள்ள பல பிரத்தியேக செவ்விகள்

Photo: BBC Tamilosai Programme Guide (Oct 1994 - March 1995)

இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் அவரது பல தளபதிகளுடன் சுட்டுக்கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

தமிழோசை உட்பட பிபிசிக்கு பிரபாகரன் அவர்கள் கடந்த காலங்களில் பல பிரத்தியேக செவ்விகளை வழங்கியுள்ளார்.

அவ்வாறு அவரால் வழங்கப்பட்ட சில செவ்விகளை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

முதலில், 1987 ஆம் ஆண்டு, சார்க் மாநாடு முடிந்தவுடன் தமிழோசையின் சார்பில் சங்கர் அவர்கள் பிரபாகரனை செவ்வி கண்டிருந்தார்.

1987 ஆண்டு வழங்கிய செவ்வி

1991 இல் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் கடுமையான மோதல்கள் நடந்துகொண்டிருந்தபோது பிபிசியின் செய்தியாளர் கிறிஸ் மோரிஸ் அவர்கள் இலங்கைக்கு சென்றிருந்தார். அப்போது அவருக்கு பிரபாகரன் செவ்வி ஒன்றை வழங்கியிருந்தார்.

1991 இல் வழங்கப்பட்ட செவ்வி

தமிழோசையின் முன்னாள் மூத்த தயாரிப்பாளர் ஆனந்தி சூரியப் பிரகாசம் அவர்களுக்கு பிரபாகரன் அவர்கள் இரண்டு முக்கிய செவ்விகளை வழங்கியிருந்தார்.

அதில் முதலாவதாக 1994 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட செவ்வியை இங்கு கேட்கலாம்.

1994 இல் வழங்கப்பட்ட செவ்வி



மற்றுமொரு செவ்வி ஆனந்திக்கு 1995 இல் பிரபாகரனால் வழங்கப்பட்டது.

1995 இல் வழங்கப்பட்ட செவ்வி

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது இறுதி மாவீரர் நாள் உரையில் (2008 ஆம் ஆண்டு), உலக நாடுகளும் இந்தியாவும் தம் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

உலக நாடுகள் தடைகளை நீக்கி தமது போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும், அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இறுதி மாவீரர் உரையின் தொகுப்பு

(Source: BBCTamil.com)

Monday, May 18, 2009

பாஸ்கர் நெப்பொலியன் மறைவு...

சர்வதேச வானொலி நேயரும் நமது சர்வதேச வானொலி இதழின் துணை ஆசிரியருமான தஞ்சை பாஸ்கர் நெப்பொலியன் கடந்த வெள்ளி (15-05- 2009) அதிகாலை 4.30-க்கு தஞ்சாவூர் அருகில் உள்ள கந்தர்வக்கோட்டை எனும் இடத்திற்கு அருகில் இரண்டு சக்கர வாகனத்தில் தனது நண்பருடன் வருகையில் எதிரே வந்த லாரியால் மோதப்பட்டு அதே இடத்தில் அகால மரணமடைந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவரது குடும்பத்தார்க்கு ஆழ்ந்த இரங்களைத் தெரிவிக்கும் அதே சமயத்தில் அவரது ஆத்மா சாந்தியடைய எல்லொருக்கும் பொதுவான இறைவனை வேண்டுகிறோம். உலகின் பல்வேறு வானொலிகளுடன் தொடர்பு வைத்திறுந்த ஒரு அருமையான வானொலி நண்பரை நாம் இழந்துவிட்டோம். - ஆசிரியர் குழு