Saturday, May 30, 2009

சூரியப்புள்ளியும் சிற்றலை வானொலியும்: பகுதி - 3

ஒளியின் வேகம் 1 வினாடிக்கு 30 லட்சம் கி.மீ. 1 வினாடியில் 3 லட்சம் கி.மீட்டரை கடக்கும் ஒளி ஒரு ஆண்டில் அதாவது (365X24X3600) வினாடியில் கடக்கும் கி. மீட்டரில் (315 மி.கி.மீ) அதாவது 31 கோடியே 53 லட்சத்து 60 ஆயிரம் கி.மீ. ஆகும். அந்த ஆரம்ப சூரியர்களின் மையத்திலிருந்து புறப்பட்ட ஒளி, அதன் உடலை விட்டு வெளியே வருவதற்கே 50 ஆண்டுகள் பிடிக்கும் என்றால் அவற்றின் உருவ அளவை எண்ணிப் பாருங்கள்.

இதன் காரணமாகவே, அவற்றில் நீடித்து வாழ முடியவில்லை. வெகுவிரைவில் வேகமாக எரிந்து அணைந்துவிட்டன. நமது சூரியன் 10 மில்லில்யன் (10 நூறு கோடி) அதாவது, ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு நின்று எரியக்கூடியது (ஏற்கனவே சுமார் 5 பில்லியன் ஆண்டு வாழ்க்கை முடிந்து விட்டதால் நம் சூரியன் நடுவயதில் உள்ளான்) இன்னும் 5 மில்லியன் ( 5 நூறு கோடி அல்லது 500 கோடி) ஆண்டுகளுக்கு சூரியன் வெப்பத்தை உமிழ்ந்தபடி இருப்பான்.

ஆனால் ஆதி சூரியன்கள் ஒரு மில்லியன் ஆண்டுகளே எரிந்து வாழ்ந்து, சூப்பர் நோவாக்களாக வெடித்து அல்லது கரும்துளைகளாகச் சுருங்கிப் போய் விட்டன. அவை சூப்பர் நோவா-ஆக பெரும் தீப் பிழம்புடன் வெடித்து சிதறி வெளியிட்ட பொருட்கள் திரண்டுதான் இன்றைய சூரியர்கள் உருவானார்கள். சூரியன்கள் என்பது நமது சூரியன் மட்டுமல்ல, சூரியனைப் போல் பல லட்சம் மடங்கு பெரிதான நட்சத்திரங்களையும் சேர்த்துத் தான். எனவே பலமுறை ஏற்பட்ட சூப்பர் நோவாக்களின் வெடிப்பாலும் கரும்துளைகளாலும் பல விண்மீன்கள் தோன்றின. நாம் இன்று பார்த்துக் கொண்டு இருக்கும் ஆகாய விண்மீன்கள் இரண்டாம், மூன்றாம் அல்லது நான்காம் சந்ததிகளான சூரியர்களே ஆவார்கள். (நம் குடும்பத்தில் மகன், பேரன், கொள்ளுப்பேரன் என்பதைப் போல்.
தொடரும்...
- கிழக்கு தாம்பரம் வி. பாலசுப்ரமணி, அலைபேசி: 99520 67358

No comments: