Thursday, June 04, 2009

சூரியப்புள்ளியும் சிற்றலை வானொலியும்: பகுதி - 5

பெரு வெடிப்பு2003-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ம் தேதி வான் இயல் வல்லுநர்கள் நம் பிரபஞ்சம் பிறந்த தேதியை ஓரளவுக்குத் துல்லியமாகக் கண்டு பிடித்ததாகத் தகவல் வெளியிட்டுள்ளார்கள். பிரபஞ்சம் முதலில் எவ்வாறு இருந்தது என்ற ஒரு வரைபடம் (மேப்) ஒரு செயற்கைக் கோள் தந்த தகவல்படி வரையப்பட்டுள்ளது.Hubble என்ற செயற்கைக்கோள் பெரிய வெடிப்பின் போது ஏற்பட்டபோது எஞ்சியிருந்த ரேடியோ மைக்ரோவேவ் (நுண்அலை) களின் வேறுபாடுகளைக் கணக்கிட்டு ஒரு வரைபடம் தந்துள்ளது. இந்த வரைபடம் முதன்முதலில் விண்மீன்கள் நமது பிரபஞ்சத்தில் தோன்றியதையும் பெரிய வெடிப்பிற்குப் பின் 200 பில்லியன் ஆண்டுகள் கழித்து) எப்படி பெரிய வெடிப்பு ஏற்பட்டது என்பதற்கு ஆதாரமாக உள்ளது.

Hubble கோள் தகவல்கள்படி பிரபஞ்சம் (13.7 பில்லியன் ஆண்டுகள் 1 %) வயதுள்ளது. அதன் நிறையில் 4% அணுக்களும், 23% இருள் பொருள் (டார்க் மேட்டர்) உள்ளதாகவும் பெரிய வெடிப்பின் போது ஏற்பட்டு எஞ்சியுள்ள துகள்கள் இன்னும் உள்ளன என்றும் 73% இருள் ஆற்றல் (டார்க் எனர்ஜி) இருப்பதாகவும் வல்லுநர்கள் அறிவித்துள்ளார்கள்.
நம் பிரபஞ்சத்தில் அதிகமாகக் காணப்படும் தனிமங்கள்:

1) 90 - 95% ஹைட்ரஜன் அணுக்கள் பிரபஞ்சத்தில் உள்ளன.
2) 4 - 9% ஹீலியம் அணுக்கள் உள்ளன.
3)மற்ற எல்லா தனிமங்களும் சேர்ந்து சுமார் 1% என்றளவில் பிரபஞ்சத்தில் உள்ளன.
4) லித்தியம், பெரிலியம், போரான் போன்ற தனிமங்கள் மிகவும் குறைவு. இரும்பு அதிகமாக இருப்பினும் ஆக்ஸிஜன் முதல் ஈயம் (லெட்) வரை மற்ற தனிமங்கள் அதிகம் இல்லை.
தொடரும்...
- கிழக்கு தாம்பரம் வி. பாலசுப்ரமணி, அலைபேசி: 99520 67358

No comments: