Saturday, June 06, 2009

சூரியப்புள்ளியும் சிற்றலை வானொலியும்: பகுதி - 6

ஆரம்பத்தில் நம் பிரபஞ்சம் சுமார் 20 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் அணுவை விட மிகச் சிறியத் துகள்களான எலக்ட்ரான், புரோட்டான், பாஸிட்ரான், நியூட்ரான் போன்றவைகளாலும் சிறையில்லாத துகள்களான நியூட்டிரினோக்கள், ஆன்டி நியூட்டிரினோக்கள் மற்றும் ஃபோட்டான் ஆகியவைகளால் உண்டானது. இவை 10-28 செ.மீ. (தசம புள்ளிகளுக்குப்பின் 27 பூஜ்ஜியங்கள் எழுதி, பிறகு ஒன்று எழுத வேண்டும்).
பெரிய வெடிப்பு (பிக் பேங்) ஏற்பட்டதும் சில நொடிகளில் மிக அடர்த்தியான இந்த மிகச் சிறிய துகள்களின் பெரிய வெடிப்பு ஏற்பட்டு நியூட்ரான் சிதைந்து புரோட்டானாகவும், எலக்ட்ரானாகவும் மாறி அதிக சக்தியை வெளிப்படுத்தியது. (நியூட்ரான்-புரோட்டான் பிளஸ் எலக்ட்ரான் பிளஸ் சக்தி)

ஹைட்ரஜன் அணுவின் ஒரு அணுக்கருவில் (நியூக்கியஸ்) ஒரு புரோட்டான் உள்ளதால் நியூட்ரான் புரோட்டானாக மாறும் சிதைவு நம் பிரபஞ்சத்தில் ஹைட்ரஜன் உண்டாவதற்கு ஆதாரமாக உள்ளது.

ஹைட்ரஜன் அணுக்கரு, அதிகமான வெப்பத்தில் ஹீலிய அணுக்கருவாக மாறும் போது பல மில்லியன் டிகிரி, வெப்பம் ஏற்படுகிறது. ஹீலியம் எரியும்போது கார்பன் (கரி) அணுக்கரு முதலில் உண்டாகிறது. பிறகு இரும்பு போன்ற தனிமங்கள் ஏற்படுகின்றன.
தொடரும்...
- கிழக்கு தாம்பரம் வி. பாலசுப்ரமணி, அலைபேசி: 99520 67358

No comments: