
கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த சமுதாய வானொலி உரிமங்கள் தற்பொழுது என்.ஜி.ஓ-களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் விரைவில் திருச்சி, திருச்சங்கோடு மற்றும் குமாரபாளையத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கும், மதுரை மற்றும் நாகப்பட்டினத்தில் உள்ள அரசு சாரா தொண்டு நிறுவனத்திற்கும் சமுதாய வானொலி தொடங்க அனுமதி கிடைத்துள்ளது. இதன் மூலம், இந்தியாவிலேயே அதிக சமுதாய வானொலிகள் உள்ள மாநிலமாக, நமது தமிழ்நாடு உள்ளது, வானொலி நேயர்களாகிய நமக்கெல்லாம் பெருமையே!
No comments:
Post a Comment