Monday, May 18, 2009

டிஜிட்டல் பக்கம்


ஈட்டன் நிறுவனம் இந்த ஆண்டு பல புதிய வானொலிப் பெட்டிகளை அறிமுகப்படுத் தியுள்ளது. அந்த வகையில் "சேட்டிலைட் 750' எனும் இந்த புதிய வானொலி பெட்டியில், பல புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். நெட்டலை, மத்திய அலை, சிற்றலை, பண்பலை மட்டுமல்லாது ஏர் கிராஃப்ட் அலைவரிசைகளையும் இந்த வானொலிப் பெட்டியில் கேட்கலாம்.

எஸ்.எஸ்.பி. அலைவரிசைகளைக் கேட்கும் வசதியினையும் இந்த வானொலிப் பெட்டியில் செய்துள்ளனர். தெளிவான ஒலிபரப்புகளைக் கேட்க பல பில்டர்களை வழங்கியுள்ளதால், தெளிவில்லாத ஒலிபரப்பு களையும் தெளிவுபடுத்த வசதிகள் பலவற்றை இந்த வானொலி கொண்டுள்ளது.

ஏர் கிராப்ட் அலைவரிசையானது 118 மெ.ஹெ. முதல் 137 மெ.ஹெ. வரை இதில் கேட்கலாம். அதே போன்று சிற்றலை வரிசையானது 1711 கி.ஹெ. முதல் 30000 கி.ஹெ. வரை தொடர்ச்சியான அலை வரிசைகளை இதில் கேட்கலாம்.

பெரிய திரையுடன் கூடிய சிக்னல் மீட்டரும் இதில் உள்ளது. மேலும் டியூனிங் வசதியானது பெரிதாக உள்ளதால் எளிதாக டியூன் செய்ய முடிகிறது. இந்த வானொலிப் பெட்டியில் உள்ள ஸ்பீக்கர் பெரிதாக உள்ளதால் தெளிவாக ஒலிபரப்புகளை கேட்க உதவுகிறது.

இன்னும் இரண்டு மாதங்களில் உலகெங்கும் விற்பனைக்கு வரவுள்ள இந்த வானொலிப் பெட்டியின் விலை விபரங்கள் அறிவிக்கப் படவில்லை. சேட்டிலைட் 750 வானொலிப் பற்றிய மேலதிக விபரங்களை www.etoncorp.com இணைய முகவரியில் காணலாம்.

No comments: