செயின்ட் மரியா டி கலேரியா ஒலிபரப்பு
தனது காலை மறு ஒலிபரப்பில் அலைவரிசை மாற்றத்தினை செய்து உள்ளது. காலை 7.50 முதல் 8.10 வரை 31 மீட்டர் 9545 கிலோ ஹெர்ட்சில் செயின்ட் மரியா டி கலேரியா ஒலிபரப்பு தளத்தில் இருந்து செய்கிறது.Labels: வத்திகான் வானொலி
சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
வானொலி உலகம் - 25 வது வாரம் Vaanoli Ulagam 25th week
தனது காலை மறு ஒலிபரப்பில் அலைவரிசை மாற்றத்தினை செய்து உள்ளது. காலை 7.50 முதல் 8.10 வரை 31 மீட்டர் 9545 கிலோ ஹெர்ட்சில் செயின்ட் மரியா டி கலேரியா ஒலிபரப்பு தளத்தில் இருந்து செய்கிறது.Labels: வத்திகான் வானொலி
இரவு ஒலிபரப்பானது தமிழில் 7.30 முதல் 8.30 வரை 16 மீட்டர் 17810 கி.ஹெர்ட்சில் ஜக்கிய அரபு குடியரசில் உள்ள தாபயா எனும் நகரத்தில் இருந்து ஒலிபரப்பாகிறது. இரவு 8.30 முதல் 9.30 வரை 31 மீட்டர் 9585 கிலோ ஹெர்ட்சில் ஜெர்மனியில் உள்ள நவுன் நகரத்தில் இருந்து ஒலிபரப்பாகிறது. தொடர்பு முகவரி: Tamil Section, Family Radio (WYFR), C/oRev. Alexander, Tekkali – 532 201, Andra PradeshLabels: அமெரிக்கா, வானொலிக் குடும்பம்
Labels: ரேடியோ வேவ்ஸ் இன்டர்நேஷனல், லேட்வியா
பல வானொலிகள் சமீபகாலமாக நேயர்களுக்கு கடிதங்களை அனுப்புவதை நிறுத்திவிட்டது. ஒரு சில சிறிய நாடுகள், தற்பொழுதும் நேயர்களுக்கு உடனுக்குடன் பதில் வழங்கி வருகிறது. அந்த வகையில் ரேடியோ டமாஸ்கஸ் தற்பொழுது வண்ண அட்டை, பெனன்ட், ஸ்டிக்கர், சிரியாவின் வரைபடம் ஆகியவற்றை அனுப்பி வருகிறது. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி: English Section, Radio Damascus, P.O. Box: 4702, Damascus, Syria. E-mail: radiodamasco@yahoo.com. Web: www.rtv.gov.sy (2100-2200 UTC 9330 Khz)Labels: சிரியா, ரேடியோ டமாஸ்கஸ்
வழக்கம் போல் இந்த ஆண்டும் ஒரு வேறுபட்ட நாள்காட்டியை ஈரான் வானொலி தனது நேயர்களுக்கு அனுப்பி வருகிறது. இந்த வருடம் - ஈரானில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களை மையப்படுத்தியதாக வெளிவந்துள்ள அந்த நாள்காட்டியானது பெரிய போஸ்டராக வடிவமைக்கப்பட்டுள்ளது. வழு வழு தாளில் அச்சிடப்பட்டுள்ள அந்த நாள்காட்டி தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய இந்திய முகவரி: Mr. M. Safdari, English Section, Voice of the Islamic Republic Iran, 5, Barkhamba Road, New Delhi - 110 001. E-mail: englishradion@irib.irLabels: இஸ்லாமிய குடியரசின் ஈரான் வானொலி:, ஈரான்

Labels: கனடா, ரேடியோ கனடா இண்டர்நேஷனல்
சிற்றலை ஒலிபரப்பினை கேட்கும் நேயர்கள் ஜப்பானில் அதிகம். இந்த மன்றமானது ஹெச்.சி.ஜெ.பி. மற்றும் ஏ.டபிள்யூ.ஆர். வானொலிகளில் டி.எக்ஸ் நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றது. அந்த நிகழ்ச்சிகளைக் கேட்டு விமர்சனம் எழுதுபவர்களுக்கு 2009-ஆம் வருடத்திற் கான புதிய வண்ண அட்டையை அனுப்பி வருகின்றனர். 2009-ஆம் "எருது' ஆண்டாக ஜப்பானிய அரசு கொண்டாடுகிறது. இதனை மையப்படுத்தியே நேயர்களுக்கு வண்ண அட்டையை அனுப்ப உள்ளதாக அறிவித்துள்ளனர். தொடர்பு முகவரி: Japan Shortwave Club (JSWC), C/o T Ohake, 5-31-6, Tamanawa, Kamakura 247-0071, Japan. (Toshimichi Ohtate)Labels: JSWC, வானொலிகளில் டி.எக்ஸ் நிகழ்ச்சி
தைவான்: ரேடியோ தைவான் இண்டர்நேஷனல்: புதிய இயக்குனர் திருமதி. Alice Huei-eu Kao அவர்களின் வாழ்த்துக் கடிதம், 2009 வாழ்த்து அட்டை.
நியூசிலாந்து: ரேடியோ நியூசிலாந்து இண்டர்நேஷனல்: 60ஆம் ஆண்டு சிறப்பு வண்ண அட்டை, நிகழ்ச்சி நிரல் பட்டியல், ஸ்டிக்கர்.
வத்திகான்: ரேடியோ வத்திகான்: புதிய நிகழ்ச்சி நிரல் பட்டியல், 2009 நாள்காட்டி, ஒலிபரப்பிகளை மையப்படுத்திய வண்ண அட்டை.
வத்திகான்: ரேடியோ வத்திகான் (தமிழ் பிரிவு): வத்திகான் வானொலி தமிழ் மாத இதழ்.Labels: ரேடியோ நெதர்லாந்து
ஐரோப்பாவில் செயல்பட்டு வரும் "யுரோப்பியன் டி.எக்ஸ் கவுன்சில்' ஆண்டு தோறும் கருத்தரங்கினை நடத்தி வருகிறது. இதில் ஐரோப்பிய வானொலி நிலையங்களும் கலந்து கொள்வதே இதன் சிறப்பு. இந்த ஆண்டிற்கான கூட்டமானது வரும் ஆகஸ்ட் 28 முதல் 30 வரை ஐயர்லாந்தில் நடைபெற உள்ளது, கூட்டம் நடைபெறும் இடம்: Grand Carnal Hotel, Grand Canal Street, Balls bridge, Dublin 4, Ireland. Web: www.grandcanalhotel.com
அமெரிக்காவில் இருந்து செயல்பட்டு வரும் இந்த மன்றமானது மத்திய அலையில் தொலைத் தூரத்தில் இருந்து ஒலிபரப்பும் நாடுகளைக் கேட்டு வருகிறார்கள். குறிப்பாக 510 கி.ஹெ. முதல் 1720 கி.ஹெ. வரையிலான அலைவரிசையைக் கேட்கின்றனர். இவர்கள் "டி.எக்ஸ். மானிட்டர்" எனும் இதழை (வருடத்திற்கு 30 இதழ்கள்) வெளியிட்டு வருகின்றனர். இதில் வானொலி நிலையங்கள் தொடர்பான கட்டுரை, வானொலிப் பெட்டிகளின் விமர்சனம், தொழில்நுட்ப கட்டுரைகள், டி.எக்ஸ். டிப்ஸ் எனப் பலப் பயனுள்ளத் தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். மேலதிக விபரங்களுக்கு: The International Radio Club of America, P.O.Box: 60241, LaFayetter, LA 70596. Web: www.ircaonline.orgLabels: டி.எக்ஸ். டிப்ஸ், டி.எக்ஸ். மானிட்டர்
Labels: அகில இந்திய வானொலி, விவித பாரதி
Labels: வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா
Labels: அகில இந்திய வானொலி, ஹாம் வானொலி
Labels: இத்தாலி வானொலி, ஹாம்

Labels: சர்வதேச வானொலி, தமிழ் சிற்றலை வானொலிகள்

Labels: ஏப்ரல் 2009, சர்வதேச வானொலி, டி.ஆர்.எம் வானொலி, தமிழ் சிற்றலை வானொலிகள்

Labels: DG SMS NET, மின்னகல் செல்வராஜ்

Labels: Sunspot, சர்வதேச வானொலி, மார்ச் 2009
84 வருடங்கள் பாரம்பரியம் கொண்ட இலங்கை வானொலியின் இளம் அறிவிப்பாளர்களில் ஒருவரும், வெகு வேகமாக தனது இளம் பிராயத்திலேயே அறிவிப்பாளர்களில் முன்னணியில் திகழும் ஒருவருமான செல்வி ராதிகா கலைமணி (இச்செவ்வியை எமக்கு வழங்கிக் கொண்டி ருக்கும்போது இவர் செல்வியாக இருந்தார். தற்போது இவரது செவ்வி நமது இதழில் பிரசுரமாகும் காலத்தில் இவர் திருமதியாகி விட்டார். இவரது திருமணம் கடந்த வருடம் 2008 கடைசி பகுதியில் நடை பெற்றது. இவரது கணவர் பெயர் வின்சன் என்பது குறிப்பிடத்தக்கது.) அவர்கள் நமது இந்திய திருநாட்டிற்கு தனது அத்தை யாரானா மூத்த ஒலிபரப்பாளர் செல்வி. நாகபூஷணி அவர்களுடன் தமிழகத்தின் தலைநகராம் சிங்கார சென்னைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். Labels: இலங்கை வானொலி, சகாதேவன் விஜயகுமார், ராதிகா கலைமணி

Labels: சீன வானொலி, வானொலி பதில்கள்